மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும் - ராகுல் காந்தி ஆவேசம்

இவிஎம் - ராகுல் காந்தி
இவிஎம் - ராகுல் காந்தி
Updated on
2 min read

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் எழும் சர்ச்சை குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இவிஎம் இயந்திரங்கள் மற்றும் அதன் செயல்முறைகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் இன்று கோரிக்கை வைத்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை விமானங்களின் ’கருப்பு பெட்டி’யுடன் ஒப்பிட்டதோடு, அதனை யாரும் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்று நேற்றைய தினம் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இந்தநிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது புதிய கோரிக்கையாக தேர்தல் ஆணையத்திடமே அவர் முன்வைத்துள்ளார்.

ஜனநாயக அமைப்புகளை கைப்பற்றி வருகிறார்கள். இந்த சூழலில் வெளிப்படையான தேர்தல் செயல்முறைகளில் மட்டுமே பொது மக்களுக்கான பாதுகாப்பு உள்ளது. இவிஎம் எந்திரங்கள் தற்போது கருப்பு பெட்டியாக உள்ளன. தேர்தல் ஆணையம் இந்த எந்திரங்கள் மற்றும் செயல்முறைகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும்” என்று இன்றைய தினம் தான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் ராகுல் காந்தி கோரியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவரான கவுரவ் கோகோய், “மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தவறு செய்ய முடியாதவை என்று கருதும் முன், இந்த தேர்தலில் எத்தனை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்தன, அதில் எத்தனை எந்திரங்களில் தவறான நேரம், தேதி, வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறித்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். இவற்றை தெரிந்துகொள்ள பொது மக்களுக்கு உரிமை இருப்பதால், தேர்தல் ஆணையம் மேற்கண்ட தகவல்களை வெளியிடும் என்று நம்புகிறேன்” என்றும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்

முன்னதாக மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் சிவசேனா வேட்பாளரின் உறவினர் ஒருவர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் மொபைல் போன் ஓடிபி உதவியால் முறைகேடு செய்ததாக வெளியாக ஊடக செய்திகளால் புதிய சர்ச்சை எழுந்தது. அதற்கு வலு சேர்க்கும் வகையில், இவிஎம் எந்திரங்களை செயற்கை நுண்ணறிவு மற்றும் சாட்ஜிபிடி மூலம் ஹேக் செய்ய முடியும் என எலான் மஸ்க் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

திருநங்கைகளுக்கு அனைத்து அரசு பணிகளிலும் 1 சதவீத இடஒதுக்கீடு... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து... 4 பேர் பலி; பலர் படுகாயம்

சவுதி அரேபியாவில் கடும் வெப்பம்: ஹஜ் பயணம் சென்ற 19 யாத்ரீகர்கள் உயிரிழப்பு!

5 மாடுகளின் உயிரைப் பறித்த பரோட்டா... கொல்லம் அருகே பரிதாபம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்ததால் பரபரப்பு: இளைஞர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in