புதுச்சேரியில் விஷவாயு தாக்கி மூவர் பலி
புதுச்சேரியில் விஷவாயு தாக்கி மூவர் பலி

விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழப்பு... ரூ.70 லட்சம் நிதியுதவி அறிவித்த முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த சிறுமிக்கு 30 லட்சம் ரூபாயும், மற்ற இருவருக்கும் தலா 20 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க முதலமைச்சராக ரங்கசாமி உத்தரவிட்டு உள்ளார்.

புதுச்சேரியில் இன்று காலை வீட்டின் கழிவறையை பயன்படுத்த முயன்ற 3 பெண்கள் அடுத்தடுத்து விஷவாயு தாக்கி உயிர் இழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வீடுகளின் கழிவறையில் இருந்து பாதாள சாக்கடைக்கு இணைப்பு வழங்குவதில் தவறு ஏற்பட்டதே இந்த விஷவாயு கசிவுக்கு காரணம் என அப்போது அவர் தெரிவித்தார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து உயிரிழந்த சிறுமிக்கு 30 லட்சம் ரூபாயும், மற்ற இருவருக்கு தலா 20 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏற்கெனவே பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வீடுகளிலும் ஆய்வு நடத்த புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in