நீட் தேர்வு வினாத்தாள் கசிந்து, தற்போது அதன் முடிவுகளிலும் முறைகேடு நடந்துள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற முடிந்த நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற 6 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நெகட்டிவ் மதிப்பெண்கள் இல்லாமல் பலருக்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இருப்பினும் இது தொடர்பாக உரிய விளக்கத்தை தேசிய தேர்வு முகமை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ’முதலில் நீட் தேர்வுத் தாள் கசிந்த நிலையில், தற்போது அதன் முடிவுகளிலும் முறைகேடு நடந்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஒரே மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றிருப்பது குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு, பலவிதமான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.’
‘மறுபுறம், தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நாடு முழுவதும் ஏராளமான குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது மிகவும் வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை அரசு புறக்கணிப்பது ஏன்? நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு தொடர்பான முறையான கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும். இந்த முறையான புகார்களை விசாரித்து தீர்வு காண்பது அரசின் பொறுப்பு அல்லவா?’ என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!
நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!
நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!
பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி