கடன் தவணை பாக்கி; வீட்டை பூட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்... இரவில் கைக்குழந்தையுடன் தெருவில் தவித்த பெண்

சிலம்பரசன் - ரேணுகா தம்பதி
சிலம்பரசன் - ரேணுகா தம்பதி
Updated on
2 min read

கடலூர் அருகே 4 மாத கடன் தவணைக்காக, வீட்டில் இருந்த பெண் மற்றும் குழந்தையை வெளியேற்றிவிட்டு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டை பூட்டி விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீஆதிவராகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலம்பரசன்-ரேணுகா தம்பதியினர். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரத்தில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் பணத்தை சிலம்பரசன் கடனாக பெற்றிருந்தார். இந்த கடன் தவணைகளை கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் சரியாக கட்டி வந்துள்ளார். ஆனால் கடந்த 4 மாதமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள சிலம்பரசன்-ரேணுகா தம்பதியினரால் கடன் தவணையை சரியாக செலுத்த முடியவில்லை.

பழுதடைந்த கிரைண்டருடன் ரேணுகா
பழுதடைந்த கிரைண்டருடன் ரேணுகா

இந்நிலையில் நேற்று இரவு திடீரென வீட்டுக்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், தவணை நிலுவைத் தொகையை ஏன் கட்டவில்லை என கேட்டு கடுமையாக பேசியுள்ளனர். அவதூறாக பேசிய அவர்களிடம், தனது கணவர் வந்தவுடன் கடன் தொகையை விரைவில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்வதாக ரேணுகா தெரிவித்துள்ளார். ஆனால் அதனை கேட்காத நிதி நிறுவன ஊழியர்கள், ஆபாசமாக பேசியதோடு மிரட்டல் விடுத்தும் பேசியுள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் வீட்டுக்குள் புகுந்து கைக்குழந்தையோடு ரேணுகாவின் கையைப் பிடித்து வெளியே அழைத்து வந்து வீட்டுக்கு முன்பாக நிற்க வைத்துள்ளனர். தொடர்ந்து வீட்டிற்கு பூட்டு போட்டு விட்டு அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

தனியார் நிதி நிறுவனத்தின் ஆப்
தனியார் நிதி நிறுவனத்தின் ஆப்

வீட்டில் ரேணுகா மாவு அரைத்துக் கொண்டு இருந்த நிலையில், பூட்டப்பட்டிருந்த வீட்டிற்குள் கிரைண்டர் பழுதாகி நின்றுள்ளது. இதனிடையே இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சிலம்பரசன் வீட்டிற்கு விரைந்துள்ளார். தொடர்ந்து தனியார் நிதி நிறுவன ஊழியர்களுக்கு போன் மூலம் அழைத்து மனைவி, குழந்தையை வெளியே அனுப்பிவிட்டு வீட்டை பூட்டியதற்கான காரணம் குறித்து கேட்டுள்ளார். அப்போது தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.

ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையம்
ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையம்

இது தொடர்பாக ஸ்ரீமுஷ்ணம் காவல் துறையில் சிலம்பரசன் மற்றும் ரேணுகா தம்பதியினர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாலை வேலைகளில் கடன் கேட்டு வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு செல்லக்கூடாது என்ற விதி அமலில் இருந்த போதும், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அத்துமீறி இருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வேளாங்கண்ணி மாதாவிற்கு தங்ககிரீடம் அணியும் நிகழ்ச்சி... மனமுருக கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை!

விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்து வரும் பிரதமர் மோடி: வெளியானது புது வீடியோ

சாவர்க்கர் குறித்து அவதூறு: ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

பெங்களூரு விமான நிலையத்தில் தட்டித் தூக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா... அதிரடி காட்டிய எஸ்ஐடி!

வரலாறு காணாத வெப்பம்... 19 பேர் சாவு: மருத்துவமனையில் 40 பேர் அனுமதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in