கர்நாடகாவில் அதிர்ச்சி... காரை முந்தியதால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்!

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்

கர்நாடகா மாநிலம், நெலமங்களா சுங்கச்சாவடி பகுதியில் தங்களை முந்தி சென்றதற்காக ஆம்புலன்ஸ் ஓட்டுநரை, காரில் வந்தவர்கள் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரில் ஒரு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 5 மாத குழந்தையை தும்கூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தார்.

அப்போது இந்த ஆம்புலன்ஸ் வாகனம் வழியில் ஒரு காரை முந்திச் சென்றுள்ளது. அந்த காரில் இருந்தவர்கள் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தங்களை முந்திச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை அவர்கள் திடீரென பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். சுமார் 5 கி.மீ. தூரம் விரட்டிச் செல்லப்பட்ட நிலையில், நெலமங்களா சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸை வழிமறித்து நிறுத்தினர்.

பின்னர், காரில் இருந்து இறங்கிய கும்பல், திடீரென ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜான் என்பவரை தாக்கினர். அவசர மருத்துவ நிலைமை, குழந்தையின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்த போதிலும், அந்த கும்பல் கருணையின்றி தாக்குதல் நடத்தினர். இதற்கிடையே அங்கு வந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி ஆம்புலன்ஸ் வாகனம் மருத்துவமனைக்கு செல்ல அனுமதித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கீழே இறங்கி வரக் கோரி, மதுபோதையில் இருந்த கும்பல் தாக்கிய காட்சிகளை வாகனத்திலிருந்த மற்றொருவர் வீடியோ பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் பெங்களூரு ரூரல் எஸ்பி- மல்லிகார்ஜுன் பால்தாண்டி கூறுகையில், "இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தாக்குதல் நடத்திய யுவராஜ் சிங், மஞ்சுநாத், லத்தீஷ் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளோம்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in