சிக்கிமில் எஸ்கேஎம் கட்சியின் பிரேம் சிங் தமாங் மீண்டும் முதல்வராக தேர்வு!

பிரேம் சிங் தமாங்
பிரேம் சிங் தமாங்

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) சட்டப்பேரவை கட்சித் தலைவராக பிரேம் சிங் தமாங் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தலும் சேர்த்து நடத்தப்பட்டது.

இவற்றில் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அருணாச்சலில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், சிக்கிம் மாநிலத்தில் ஆளும் எஸ்கேஎம் கட்சி, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா

அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் 31 தொகுதிகளில் எஸ்கேஎம் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎஃப்) ஓரிடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு தற்போதைய முதல்வர் பிரேம் சிங் தமாங் அதிகாரப்பூர்வ இல்லத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்கேஎம் கட்சியின் 31 எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் எஸ்கேஎம் பொதுச்செயலாளர் அருண் உப்ரேட்டி, தமாங்கின் பெயரை சட்டப் பேரவை கட்சித் தலைவராக முன்மொழிந்தார்.

சிக்கிம் மாநிலம்
சிக்கிம் மாநிலம்

அதை சங்கா தொகுதி எம்எல்ஏ சோனம் லாமா ஆதரித்தார். இதைத் தொடர்ந்து அவர் ஒருமனதாக சட்டப் பேரவை கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சித் தலைவர்கள், பிரேம் சிங் தமாங்கிற்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அவரது தலைமையின் கீழ் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாக உறுதியளித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!

சென்னையில் இருந்து கிளம்பிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... உடனடியாக இறக்கி விடப்பட்ட 182 பயணிகள்!

5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!

மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in