பொள்ளாச்சி சூலக்கல் மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா... வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் பரவசம்!

சூலக்கல் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா
சூலக்கல் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா
Updated on
2 min read

கோவை அருகே பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

பொள்ளாச்சி அடுத்துள்ள சூலக்கல் பகுதியில் அமைந்துள்ளது சூலக்கல் மாரியம்மன் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் பல நூறு ஆண்டுகள் பழமையானதாகும். இங்குள்ள அம்மனை வழிபட உள்ளூர் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் வாரத்தில் கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

சூலக்கல் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா
சூலக்கல் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா

இந்தாண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 13.ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. நாள்தோறும் கிராம மக்கள் பூச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் வழிபாடு செய்து வந்தனர். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் தேர் திருவிழாவில் முதல் நாளான இன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவப்பு பட்டு உடுத்தி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கடந்த 17 நாட்களாக விரதமிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சூலக்கல் மாரியம்மன் கோயில்
சூலக்கல் மாரியம்மன் கோயில்

முக்கிய வீதிகளில் அசைந்தாடி வந்த தேர் மீது பக்தர்கள் வாழைப்பழம் வீசி பயபக்தியுடன் வழிபட்டனர். இன்று தொடங்கி முதல்நாள் வலம் வந்த தேர், கிராமத்தின் கிழக்கு எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டது. நாளை மற்றும் நாளை மறு நாள் தொடர்ந்து மூன்று நாட்கள் தேர்த் திருவீதி உலா வந்து கோயிலை வந்தடையும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தேர்த் திருவிழாவை காண சூலக்கல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு குறி... ட்ரோன் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே திட்டம்

கன்னியாகுமரியில் 3,000 போலீஸார் குவிப்பு... கடல் நடுவே இன்று தியானத்தை தொடங்குகிறார் மோடி!

மீண்டும் மீண்டும் வழக்கு... மதுரையில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது!

பூரி ஜெகநாதர் கோயில் திருவிழாவில் விபரீதம்: பட்டாசு வெடித்ததில் 15 பேர் படுகாயம்

தங்கம் கடத்திய வழக்கில் சசிதரூர் உதவியாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in