பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்களிடம் பணம் கேட்டு தகராறு; உருட்டு கட்டையால் தாக்கியதால் பரபரப்பு!

பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்களை தாக்கிய கும்பல்
பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்களை தாக்கிய கும்பல்

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்தவர்களிடம் மர்ம கும்பல் ஒன்று பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு, அவர்களை உருட்டு கட்டையால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மரிய ஆரோக்கியதாஸ். இவர் புதியதாக வீடு கட்டி, கிரகப்பிரவேசம் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இதற்காக சென்னை மற்றும் புதுச்சேரியில் இருந்து அவரது உறவினர்கள் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சி கலந்து கொண்டு மீண்டும் சொந்த ஊர் செல்வதற்காக நேற்று இரவு 10 மணி அளவில் எறையூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர்.

உருட்டு கட்டையால் தாக்கும் மர்மகும்பல்
உருட்டு கட்டையால் தாக்கும் மர்மகும்பல்

அப்போது அதே ஊரைச் சேர்ந்த சிலர் பேருந்துக்காக காத்திருந்தவர்களிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். பணம் கொடுக்க மறுத்ததால், அவர்களை மர்ம கும்பல் தாக்கக் துவங்கினர். உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியும், எட்டி உதைத்து விட்டும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். படுகாயம் அடைந்த ஆறு பேரையும், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து எலவனாசர்கோட்டைபோலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடு கிரகப்பிரவேசம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், வீடு திரும்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்களிடம் பணம் கேட்டு தராததால் உருட்டு கட்டையால் சராமரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in