மக்களவைத் தேர்தலில் படுதோல்வி... மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது பாமக!

ராமதாஸ், மோடி, அன்புமணி
ராமதாஸ், மோடி, அன்புமணி

பாமக போட்டியிட்ட 10 மக்களவை தொகுதியில் 4.23 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதையடுத்து அந்த கட்சி மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்துள்ளது.

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அக்கூட்டணி கட்சிகளை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து கட்சிகளும் தோல்வியைத் தழுவின.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தருமபுரி, சேலம், ஆரணி, திண்டுக்கல், அரக்கோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 தொகுதிகளில் பாமக போட்டியிட்டது. இதில், தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி திமுக வேட்பாளர் மணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இறுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சௌமியா அன்புமணி தோல்வி அடைந்தார் இவரைத் தவிர மீதமுள்ள 9 தொகுதிகளில் பாமக மூன்றாவது இடத்தைப் பிடித்ததுடன் 6 தொகுதிகளில் டெபாசிட் தொகையையும் இழந்தது.

இந்த மக்களவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 18,79,689 வாக்குகளைப் பெற்றது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, மொத்தமாக 17,58,774 வாக்குகளைப் பெற்றது.

பாமக
பாமக

இந்த மக்களவைத் தேர்தலில் 4.23 சதவீத வாக்குகுளை மட்டுமே பெற்ற பாமக மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்துள்ளது. தேமுதிக ஏற்கெனவே மாநில கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

அண்ணாமலை ஜெயிப்பார்... பந்தயத்தில் தோற்றதால் நடுரோட்டில் அமர்ந்து மொட்டையடித்துக் கொண்ட பாஜக பிரமுகர்!

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுமா? - சத்யபிரதா சாஹு பதில்!

மயக்க ஊசி போட்டதால் உயிரிழந்த 7 வயது சிறுவன்... அறுவை சிகிச்சையில் விபரீதம்!

அண்ணாமலை அதிகமாகவே பேசிட்டார்... கூட்டணி இருந்தால் 35 தொகுதிகள் வரை கிடைத்திருக்கும்; எஸ்.பி.வேலுமணி கருத்து!

பிறந்த நாள் விழாவில் பயங்கர மோதல்... கல்லூரி மாணவர் குத்திக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in