ஜனநாயகத்தின் தாய் இந்தியா என பாஜக சொல்கிறது; ஜனநாயகம் செத்துவிட்டதாக காங்கிரஸ் விமர்சிக்கிறது... நரேந்திர மோடி கடும் விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

ஜனநாயகத்தின் தாய் இந்தியா என பாஜக சொல்வதாகவும், ஆனால் ஜனநாயகம் செத்து விட்டதாக காங்கிரஸ் விமர்சித்து வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

என்டிஏ கூட்டணி எம்பி-க்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், ”இந்தியாவின் தேர்தல் நடைமுறை குறித்து ஒரு தரப்பினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். மக்களுக்கு தேர்தல் நடைமுறை மீது சந்தேகம் வர ஒரு தரப்பினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டனர். அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவில் என்டிஏ கூட்டணி தான் ஆட்சியில் இருக்கப் போகிறது. “ என்றார்.

மேலும், “நாங்கள் தோற்கவில்லை. தோற்கவும் மாட்டோம். நாங்கள் தோற்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சந்தேகப்பட்டவர்கள், தற்போது அமைதி ஆகிவிட்டனர். உலகம் முழுவதும் ஜனநாயகத்தின் தாய் இந்தியா தான் என பாஜக கூறி வருகிறது. ஆனால் இந்தியாவில் ஜனநாயகம் செத்து விட்டதாக காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளது.” என்றார்.

பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பி-க்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பி-க்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டம்

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த மூன்று தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற இடங்களை விட தற்போது பாஜக அதிக இடங்களை பெற்றுள்ளது. என்டிஏ கூட்டணிக்கு தற்போது கிடைத்திருப்பதி இமாலய வெற்றி. என்டிஏ கூட்டணி தான் புள்ளி விவரப்படி வலிமையானது. 4ம் தேதிக்கு முன்பு யார் ஆட்சிக்கு வருவார்கள் என சிறுவனிடம் கேட்டால் கூட என்டிஏ கூட்டணி தான் வரும் என கூறினர். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக நடத்திய ஆட்சி வெறும் டிரெய்லர் தான். “ என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in