மோடி தலைமையில் துவங்கியது என்டிஏ கூட்டணி எம்பி-க்கள் ஆலோசனை கூட்டம்!

பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பி-க்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பி-க்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டம்

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ள நிலையில் அக்கூட்டணி தலைவர்கள், எம்பி-க்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக மட்டும் தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மத்தியில் ஆட்சி அமைக்க இந்த எண்ணிக்கை போதாது என்பதால், கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் என்டிஏ கூட்டனி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

இந்நிலையில் என்டிஏ கூட்டணி புதிய எம்பி-க்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடமான சாம்விதான் சதனில் நடைபெற்று வருகிறது.

இதில் பாஜக மற்றும் அக்கூட்டணி கட்சிகள் சார்பில் வெற்றி பெற்ற அனைத்து எம்பி-க்களும் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் நரேந்திர மோடி, நாடாளுமன்ற குழுத் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜே.பி.நட்டா, கூட்டணி கட்சித் தலைவர்களான தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள எம்பி-க்கள்
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள எம்பி-க்கள்

சிவசேனா கட்சித் தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே, லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் (ராம் விலாஸ்) சிராக் பாஸ்வான், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் எச்.டி.குமாரசாமி மற்றும் பாஜக எம்பி-க்கள் ஆகியோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in