நடுவானில் குட்டித் தூக்கம் போட்ட விமானிகள்; பாதை மாறிய விமானம்... பதறவைத்த சம்பவம்!

கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தோனேஷியாவில் நடுவானில் சென்ற விமானம் வழிமாறி சென்றதற்கு, விமானத்தை ஓட்டிய 2 விமானிகளும் அரைமணிநேரம் தூங்கியதே காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனாஷியா நாட்டின் சுலவேசி நகரில் இருந்து ஜகர்தாவுக்கு, கடந்த ஜனவரி 25ஆம் தேதி பாடிக் ஏர்பிளைட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் 320 என்ற விமானம் 153 பயணிகளுடன் சென்றது. இந்த விமானத்தில் 2 விமானிகளும், 4 விமானப் பணியாளர்களும் இருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிதுநேரத்தில் வழக்கமான பாதையில் இருந்து விலகி சென்றது.

இதையறிந்து பதறிய விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானிகள் இருவரையும் தொடர்பு கொண்டனர். ஆனால், அவர்களிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. விமானம் கடத்தப்பட்டு விட்டதா, பயணிகளின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விட்டதா என்று அதிகாரிகள் பதற்றமடைந்தனர்.

சுமார் 35 நிமிடத்திற்கு பிறகு விமானம் வழக்கமான பாதைக்கு வந்து தனது பயணத்தைத் தொடங்கியது. இதன் பிறகே விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். விமானமும் பாதுகாப்பாக ஜகர்தா நகரில் தரையிறங்கியது. அந்த 35 நிமிடம் என்ன நடந்தது தொடர்பாக விமானத்தை ஓட்டிய 2 விமானிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் இறுதியில் விநோதமான காரணத்தை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதாவது 2 விமானிகளும் நடுவானில் விமானம் பறந்துக் கொண்டிருந்தபோது 35 நிமிடம் குட்டித் தூக்கம் போட்டுள்ளனர். தூக்க கலக்கமாக இருப்பதால், பார்த்துக் கொள்ளும்படி ஒரு விமானி தூங்கியுள்ளார். மற்றொரு விமானி விமானத்தை இயக்கியுள்ளார். அவரும் சில நிமிடத்தில் தூங்கிவிட்டார். இருவரும் தூங்கியதால், விமானக் கட்டுப்பாட்டு விமான நிலைய அதிகாரிகளுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.

வழிமாறிச் சென்ற விமானம்
வழிமாறிச் சென்ற விமானம்

28 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு விமானி தூக்கத்தில் இருந்து எழுந்தபோது, விமானம் தவறான பாதையில் செல்வதை உணர்ந்துள்ளார். அதன்பிறகு விமானத்தைச் சரியான திசையில் செலுத்தியுள்ளார். எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. விபத்தும் ஏற்படவில்லை. மேலும், விமானமும் சரியான நேரத்தில் வந்து தரையிறங்கியுள்ளது.

எனினும், விமானிகளின் இந்த அஜாக்கிரதையான செயல் விமானப் பயணிகளின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கண்டித்த இந்தோனேசிய விமானப் போக்குவரத்து துறையின் பொது இயக்குநர் மரியா கிறிஸ்டி என்நாத் முர்னி, "ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் விமானிகளுக்கு ஓய்வுநேரம் கொடுப்பதிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ரமலான் நோன்பு... முஸ்லிம் அரசு ஊழியர்களின் பணி நேரத்தில் திடீர் மாற்றம்!

சமயபுரம் கோயிலில் தீ விபத்து... பூசாரிகளுக்கு தீக்காயம்; பக்தர்கள் அதிர்ச்சி!

காளிக்கு நள்ளிரவில் காளி பூஜை... பண்ணை வீட்டில் மண்டை ஓடுகளால் பரபரப்பு!

குற்றவாளியைப் பிடிக்கச் சென்ற இடத்தில் போலீஸாரை தாக்கிய கும்பல்... பரபர சிசிடிவி காட்சிகள்!

இயக்குநர், நடிகர் சூரியகிரண் திடீர் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in