முஸ்லிம் அரசு ஊழியர்களின் பணி நேரம் திடீரென மாற்றம்: தெலங்கானா அரசு அறிவிப்பு!

ரம்ஜான் தொழுகை
ரம்ஜான் தொழுகை

ரம்ஜான் பண்டிகைக்காக முஸ்லிம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நேரத்தை தெலங்கானா அரசு குறைத்து உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானா தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி
தெலங்கானா தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி

இது தொடர்பாக தெலங்கானா தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி பிறப்பித்துள்ள உத்தரவில், ரம்ஜான் பண்டிகைக்காக முஸ்லிம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகம், பள்ளியை விட்டு வெளியேற அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அறிவிப்பு ஒப்பந்தம், அவுட்சோர்சிங், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு பொருந்தும். மார்ச் 12 முதல் ஏப்ரல் 11 வரை முஸ்லிம் அரசு ஊழியர்கள் அலுவலகங்கள் அல்லது பள்ளிகளை விட்டு ஒரு மணி நேரம் முன்னதாக வெளியேறலாம். புனித ரம்ஜான் மாதம் முழுவதும், அவர்கள் மாலை 4 மணிக்கு அலுவலகங்கள் அல்லது பள்ளிகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள் என்று உத்தரவில் தெரிவித்துள்ளார்.

ரம்ஜான் தொழுகை
ரம்ஜான் தொழுகை

இதற்கிடையில் ரம்ஜான் தேதியை தீர்மானிக்க அதன் மாதந்திரக் கூட்டத்தை இன்று மாலை 6 மணிக்கு கூட்ட சதர் மஜ்லிஸ்-இ-உலமா-இ-டெக்கான் மத்திய ரூட்-இ-ஹிலால் கமிட்டி முடிவு செய்துள்ளது. அதன் செயலாளர் மௌலானா சையத் ஹசன் இப்ராஹிம் ஹுசைனி குவாட்ரியின் மேற்பார்வையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.

மேலும், சந்திரனைப் பார்க்கும் நபர்கள், 9866112393, 9849879426, 9000008138 அல்லது 24603597 ஆகிய எண்கள் மூலம் குழுவுக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று மௌலானா சையத் ஹசன் இப்ராஹிம் ஹுசைனி குவாட்ரி தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


தத்துவமேதை சாணக்யரின் வம்சமா தோனி ?! வைரலாகும் ஆய்வு முடிவுகள்!

#Oscars2024 | 7 விருதுகளை வென்று மாஸ் காட்டிய ‘ஓப்பன்ஹெய்மர்’!

டிகிரி படித்திருந்தால் போதும்... இந்திய அரசு நிறுவனத்தில் வேலை!

'அனைவரும் பைத்தியமாகி விட்டனர்'... அமைச்சர் உதயநிதி மனைவியின் ஆவேசப் பதிவு!

திண்டுக்கல்லில் ஜோதிமணி, மயிலாடுதுறையில் திருநாவுக்கரசர்?... தொகுதி மாறும் எம்.பி-க்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in