மக்களவைத் தேர்தலில் இந்தியா உலக சாதனை படைத்துள்ளது: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பெருமிதம்!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

மக்களவைத் தேர்தலில் இந்தியா உலக சாதனை படைத்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், புது டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்தனர் என்பதை குறிப்பிட்டார். உலகிலேயே இந்தியாவில் அதிக வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.

செய்தியாளர்கள்  சந்திப்பு கூட்டம் நடத்திய தேர்தல் ஆணையர்கள்
செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடத்திய தேர்தல் ஆணையர்கள்

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மேலும் கூறுகையில், “சமூக ஊடகங்களில் 'காணாமல் போன ஜென்டில்மேன் (தேர்தல் ஆணையம்) திரும்பி வந்துள்ளார்' என்ற மீம்ஸை நீங்கள் பார்ப்பீர்கள். ஆனால் நாங்கள் ஒருபோதும் காணாமல் போகவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந்திய வாக்காளர்களுக்கு நாங்கள் பாராட்டு தெரிவிக்கிறோம். முதியோர் வீடுகளுக்குச் சென்று வாக்குகளை சேகரித்துள்ளோம். 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களித்தனர்.

1.5 கோடி வாக்குச் சாவடிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் பயன்பாட்டுக்காக 135 சிறப்பு ரயில்கள், 4 லட்சம் வாகனங்கள், 1,692 குடியிருப்புகள் பயன்படுத்தப்பட்டன. 68,763 கண்காணிப்புக் குழுக்கள் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டன. 2024 தேர்தலில் இந்திய வாக்காளர்கள் வரலாறு படைத்துள்ளனர்.

31 கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். 642 மில்லியனுக்கும் ((64 கோடி) அதிகமான வாக்குள் பதிவாகி உலக சாதனையை படைத்துள்ளோம். இது அனைத்து ஜி-7 நாடுகளின் வாக்காளர்களை விட 1.5 மடங்கு அதிகம். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளின் வாக்காளர்களை விட 2.5 மடங்கு அதிகமாகும்” என்றர்.

இதையும் வாசிக்கலாமே...

கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!

சென்னையில் இருந்து கிளம்பிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... உடனடியாக இறக்கி விடப்பட்ட 182 பயணிகள்!

5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!

மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in