பாஜகவுக்கு நாட்டு மக்கள் அடக்கத்தை கற்றுத் தந்துள்ளனர்: ப.சிதம்பரம் சுளீர்!

பாஜகவுக்கு நாட்டு மக்கள் அடக்கத்தை கற்றுத் தந்துள்ளனர்: ப.சிதம்பரம் சுளீர்!

தேர்தலில் காங்கிரஸுக்கு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது. தோல்வி என்பது பிரதமர் மோடிக்குதான். இந்த பாஜக ஆட்சி நிலைக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"இந்தியா கூட்டணி அகில இந்திய அளவில் 234 இடங்களை வென்றிருப்பது சாதாரண வெற்றி அல்ல. 400 இடங்களை இலக்கு வைத்திருந்த பாஜக 240 இடங்களில் மட்டுமே வென்று உள்ளது. பாஜகவுக்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி வெற்றிக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

4வது, 5வது சுற்று வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் 300 இடங்களை தாண்டி விட்டோம், 400ஐ நோக்கி பீடுநடை போட்டு வருகிறோம் என்றெல்லாம் பீற்றிக்கொண்டார்கள். அவை எல்லாம் எவ்வளவு பொய்யான பிரச்சாரங்கள் என்பவை இப்போது அம்பலமாகியுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு பாஜகவால் தயாரிக்கப்பட்டது. வாக்களித்தவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்ட அனைவருமே 350 இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும் என தெரிவித்தனர். இதில் 10 கூட்டி, 10 குறைத்து உங்கள் தொலைக்காட்சிகளில் வெளியிடுங்கள் என்று கூறினர். எல்லா தொலைக்காட்சிகளிலும் 350 - 400 என்ற எண்களை வெளியிட்டு பொய் பிரச்சாரம் செய்தது பாஜக. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மக்களை முட்டாளாக்கியுள்ளது. கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு நடத்தப்பட்டு, மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். பாஜகவுக்கு நாட்டு மக்கள் அடக்கத்தை கற்றுத் தந்துள்ளனர்.

பங்குச்சந்தையின் வளர்ச்சி இந்திய பொருளாதார வளர்ச்சியை காட்டவில்லை. பங்குச்சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ளது வளர்ச்சி அல்ல; வீக்கம். இவிஎம் முறை வேண்டாம் என கூறவில்லை; நடைமுறையில் மாற்றம் வேண்டும் என்றே கூறுகிறோம். தேர்தல் முடிவால் மோடியும் பாஜகவினரும் களையிழந்து, பொலிவிழந்து, உற்சாகம் இழந்துள்ளனர். தேர்தலில் மோடிக்கு தார்மீக தோல்வி கிடைத்துள்ளது. அரசியல் சாசனத்தை தேர்தல் முடிவுகள் மூலம் மக்களே காத்துள்ளனர்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

தேர்தல் முடிவுகள் அனைத்து கட்சியினருக்கும் படிப்பினைதான். சில மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி எங்களுக்கு படிப்பினையாக உள்ளது. நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம், கொண்டாடுகிறோம் அதில் மோடிக்கு என்ன பிரச்சினை? தேர்தலில் காங்கிரஸுக்கு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது. தோல்வி என்பது பிரதமர் மோடிக்குதான், பாஜக ஆட்சி நிலைக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in