வடமாநிலங்களில் பாஜகவின் போலி வாக்குறுதிகள் இனிமேலும் எடுபடாது... பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் HR Ferncrystal

"வடமாநிலங்களில் பாஜகவின் ஏமாற்றுவேலை இனிமேலும் எடுபடாது" என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடந்து வருகிறது. இதில், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் ஆகியோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தனது தாயார் ருக்மணி உடன் மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்தார். அங்கு தனது வாக்கைச் செலுத்திவிட்டு வெளியே வந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தேர்தலில் வாக்களித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
தேர்தலில் வாக்களித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் HR Ferncrystal

அப்போது பேசிய அவர், "கடந்த மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த முறை மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான அறிக்கையே எனக்கு வருகிறது. ஆனால், 300 முதல் 400 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று பாஜகவினர் ஒரு போலியான பிம்பத்தை கட்டமைக்க முயற்சிக்கின்றனர்.

ஆனால், அந்தக் கட்சி 200 முதல் 250 சீட்களை தாண்டாது என்பதே கள யதார்த்தமாக இருக்கிறது. இதுதான் நம்பிக்கையான நிறுவனம் எடுத்த கருத்து கணிப்பும் கூறுகிறது. கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்தியா மிகவும் பின்னோக்கிச் சென்று விட்டது.

பாஜக
பாஜக

வேலைவாய்ப்பு, மதநல்லிணக்கம், பொருளாதாரம், சமூதாய ஒற்றுமை உள்ளிட்டவற்றில் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. பகுத்தறிவு, மொழி உணர்வு, தமிழ்ப்பற்று உள்ள தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு இடம்கூடக் கிடைக்காது என்ற நம்பிக்கை இருக்கிறது. போலி வாக்குறுதிகளால் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் வடமாநில மக்களையும் பாஜக ஏமாற்றிக் கொண்டிருக்க முடியும்.

நாட்டுக்கும், வீட்டுக்கும், எது நல்லது, எது கெட்டது என்று யோசிக்கக்கூடிய தனித்துவ பண்பு மனிதனுக்கு மட்டுமே இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் வளர்ச்சிக்காக எதையும் செய்யாமல் பாஜக ஏமாற்றி விட்டது. இன்னும் 24 வருடத்தில் வளர்ச்சியை காட்டுகிறோம் என்று பாஜக சொல்வது வடமாநில மக்களிடையே இனியும் எடுபடாது என்று நினைக்கிறேன்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in