துணை முதல்வர் ஆகிறாரா நடிகர் பவன் கல்யாண்?!

பவன் கல்யாண்
பவன் கல்யாண்

நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண், ஆந்திர அமைச்சரவையில் துணை முதல்வர் பதவியை எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைத் தேர்தலும் இணைத்து நடத்தப்பட்டது. சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் ஓர் அணியாகவும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனி அணியாகவும், காங்கிரஸ், இடதுசாரிகள் ஓர் அணியாகவும் என மும்முனைப் போட்டி நிலவியது.

தேர்தல் பிரச்சாரத்தில் பவன் கல்யாண், நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடு (கோப்பு படம்)
தேர்தல் பிரச்சாரத்தில் பவன் கல்யாண், நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடு (கோப்பு படம்)

இந்நிலையில் தேர்தல் முடிவுகளின் படி, தெலுங்குதேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகள், ஜனசேனா 21 தொகுதிகள், பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றன. ஆட்சியில் இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் படுதோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராக உள்ளார். இன்று விஜயவாடாவில் தெலுங்குதேசம் கூட்டணி கட்சிகள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஒருமனதாக சந்திரபாபு நாயுடு முதல்வராக கட்சி எம்எல்ஏ-க்களால் தேர்வு செய்யப்பட உள்ளார். இதைத் தொடர்ந்து அவர் நாளை முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனசேனா கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் பவன் கல்யாண்
ஜனசேனா கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் பவன் கல்யாண்

இதற்கிடையே ஜனசேனா எம்எல்ஏ-க்கள், கட்சியின் தலைவர் பவன்கல்யாணை, கட்சியின் சட்டப் பேரவை தலைவராக நேற்று தேர்வு செய்தனர். புதிதாக அமைய உள்ள அரசில் துணை முதல்வர் பதவியை ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் எதிர்பார்ப்பதாக அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல் 5 அமைச்சர் பதவிகளையும் ஜனசேனா எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

ஆந்திர மாநில சட்டப் பேரவை கூட்டம் வரும் ஜூன் 17ம் தேதி எம்எல்ஏ-க்கள் பதவியேற்புடன் துவங்க உள்ளது. அதற்கு அடுத்த நாள் சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in