பாஜக கூட்டணியில் யார் யார் மத்திய அமைச்சர்? வெளியான பரபரப்பு தகவல்!

தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்.
தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைய உள்ள புதிய அமைச்சரவையில் கூட்டணி கட்சியினர் யார், யாருக்கு எந்த அமைச்சரவை பதவிகளைக் கேட்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக 240 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்பதால், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், கூட்டணி பலத்துடன் பாஜக ஆட்சிஅமைக்கிறது. இதற்காக, தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, மஜத உள்ளிட்ட கட்சிகளிடம் பாஜக ஆதரவை கோரியுள்ளது.

மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்.
மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்.

தெலுங்கு தேசம் 16 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களிலும், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி 7 இடங்களிலும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த கூட்டணி கட்சிகளின் ஆதரவையும் பாஜக கோரியுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. புதிய அமைச்சரவை பதவியேற்க ஏதுவாக 17-வது மக்களவையை கலைக்க பரிந்துரைத்து இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் கூட்டணி ஆதரவு கேட்டு பாஜக கோரிக்கை வைத்த கட்சிகள் தங்களுக்குத் தேவையான இலாக்காக்களைக் கேட்டு பிடிவாதம் பிடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

அதன்படி சந்திரபாபு நாயுடு மூன்று கேபினட் மற்றும் மூன்று இணை அமைச்சர் பதவிகளைக் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் சுகாதாரம், ஊரக வளர்ச்சி, போக்குவரத்து, வேளாண்மை, ஐ.டி, மற்றும் நீர்வளம் ஆகிய துறைகளை அவர் பெற விரும்புவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவும் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் மேலும் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் குறைந்தபட்ச பொதுசெயல் திட்டம் வகுக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் நிபந்தனை விதித்துள்ளார். அத்துடன், மூன்று கேபினட் மற்றும் இரண்டு இணை அமைச்சர் என மொத்த ஐந்து அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

நிதிஷ் குமார், மோடி
நிதிஷ் குமார், மோடி

கர்நாடகாவில் இரண்டு எம்.பிக்களை வைத்துள்ள மதச்சார்பற்ற ஜனதாதளம் வேளாண்துறை அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என கோரியுள்ளது. பீகாரில் 5 தொகுதிகளை வென்ற சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தியும் அமைச்சரவையில் இடம்பெற நிபந்தனை விதித்துள்ளது. என்ற தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஒரே நாளில் தங்கம் விலை ஒரே சவரனுக்கு ரூ.600 உயர்வு... மக்கள் அதிர்ச்சி!

டிரக்கிங் சென்ற கர்நாடகாவை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு!

கடனைத் திருப்பிக் கேட்ட பெண் கொன்று புதைப்பு... 20,000 ரூபாய்க்காக கொடூரம்!

மத்திய அமைச்சர் ஆகிறாரா எச்.டி. குமாரசாமி? குறி வைக்கும் முக்கிய இலாகா!

வைகாசி மாத அமாவாசை... ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in