பரபரப்பு... பாகிஸ்தானுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் முழக்கமிட்ட குற்றவாளி!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட ஜெயேஷ் பூஜாரி
பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட ஜெயேஷ் பூஜாரி
Updated on
2 min read

மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்த ஜெயேஷ் பூஜாரி, நீதிமன்றத்திலேயே பாகிஸ்தான் ஆதரவு முழக்கமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகா மாநிலம், மங்களூரு இரட்டைக் கொலைக் குற்றவாளியும், பல்வேறு வழக்குகளில் முதன்மைக் குற்றவாளியுமான ஜெயேஷ் பூஜாரி என்ற ஜெயேஷ் காந்த் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை மிரட்டினார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள அமைச்சர் நிதின் கட்காரியின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு 10 கோடி ரூபாய் தராவிட்டால் வெடிகுண்டு வெடித்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

இது தொடர்பாக மகாராஷ்டிரா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மங்களூரு இரட்டைக் கொலைக் குற்றவாளியும், பல்வேறு வழக்குகளில் முக்கியக் குற்றவாளியுமான ஜெயேஷ் பூஜாரி என்ற ஜெயேஷ் காந்த் ஜனவரி 14 மற்றும் மார்ச் 21 ஆகிய தேதிகளில் ஹிண்டலகா சிறையில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்ரிக்கு மிரட்டல் அழைப்பு விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், தீவிரவாதி அப்சர் பாஷாவுடன் அவருக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேஷ் பூஜாரி முன்பு மாநில போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஏடிஜிபி அலோக் குமாரை மிரட்டினார்.

இந்த நிலையில், ஐபிஎஸ் அதிகாரி அலோக் குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஜெயேஷ் பூஜாரியை போலீஸார் இன்று (ஜூன் 12) பெலகாவி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஜெயேஷ் பூஜாரியின் அறிக்கை நீதிமன்றத்தில் ஏற்கப்படாததால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அவர் கோஷம் எழுப்பியதாக தெரிகிறது.

இதையடுத்து உடனடியாக அவரை போலீஸார் மீட்டு ஏபிஎம்சி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டி?

நடுவரின் தவறான தீர்ப்பு... உலகக்கோப்பை வாய்ப்பை இழந்த இந்திய கால்பந்து அணி: கொதிக்கும் ரசிகர்கள்!

ரஷ்யா - உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட மேலும் இரண்டு இந்தியர்கள் பலி!

விஜயின் ‘GOAT' பட கிளைமாக்ஸ் காட்சி இது தான்... மாஸ் சம்பவம் செய்த வெங்கட்பிரபு!

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பு வீரர் பலி; 6 பேர் படுகாயம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in