உயிரைப் பணயம் வைத்து மலையேறிய 7,00,000 பக்தர்கள்... கேதார்நாத்தில் பரவசம்

சார்தாம் யாத்திரையில் பக்தர்கள்
சார்தாம் யாத்திரையில் பக்தர்கள்

சார்தாம் யாத்திரைக்காக ஒரே மாதத்தில் சுமார் 7 லட்சம் பக்தர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கேதார்நாத் தரிசனத்துக்காக பக்தி பரவசத்துடன் மலையேறி உள்ளனர்.

இந்தியாவின் ஆன்மிக பயணங்களில் பிரசித்தி பெற்ற சார்தாம் யாத்திரை, இந்த வருடம் சாதனை படைக்கும் வகையில் பக்தர்களின் வருகையை கண்டுள்ளது. கோயில் வாசல் திறக்கப்பட்ட நாளான மே 10 முதல் ஜூன் 6 வரையிலான 28 நாட்களில், கேதார்நாத் தாம் ஏழு லட்சத்திற்கும் அதிகமான யாத்ரீகர்களின் எண்ணிக்கையை தாண்டியுள்ளது. ருத்ரபிரயாக் மாவட்ட மாஜிஸ்திரேட்டின் கூற்றுப்படி,இந்த 28 நாட்களில் 7,10,698 யாத்ரீகர்கள் சன்னதியில் தரிசனம் செய்துள்ளனர்.

சார்தாம் யாத்திரையில் இடம்பெறும் புனித தலங்கள்
சார்தாம் யாத்திரையில் இடம்பெறும் புனித தலங்கள்

உத்தராகண்ட் அரசு, சார்தாம் யாத்திரைக்கு வரும் அனைத்து யாத்ரீகர்களுக்கும் பதிவு செய்வதை கட்டாயமாக்கியுள்ளது. ஆஃப்லைன் பதிவு முறையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பதிவு செய்வதோடு, திட்டமிடப்பட்ட தேதியில் மட்டுமே யாத்திரைக்கு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மே 10 அன்று அட்சய திரிதியையை முன்னிட்டு பக்தர்களுக்காக கேதார்நாத் தாமின் நுழைவாயில்கள் திறக்கப்பட்டன. பஜனைகள் மற்றும் 'ஹர ஹர மகாதேவா' முழக்கங்களுக்கு மத்தியில் பக்தி பரவசத்துடன் விழா தொடங்கியது. சன்னிதிகள் மற்றும் அணிவகுத்து நின்ற பக்தர்கள் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவலுடன் விமரிசையாக தொடங்கியது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 3.5 கிமீ உயரத்தில், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் மந்தாகினி ஆற்றின் அருகே கேதார்நாத் கோயில் அமைந்துள்ளது. கடந்த நவம்பர் 15 அன்று, குளிர்காலத்திற்கு முன்பு கோயில் கதவுகள் மூடப்பட்டன. கேதார்நாத் கோயிலுக்கு தம் உயிரையும் பணயம் வைத்து வருகை தரும் பக்தர்களில் இந்த வருடமும் பரிதாபகரமான உயிர்ப்பலிகள் தொடர்ந்து வருகின்றன.

சார்தாம் யாத்திரை
சார்தாம் யாத்திரை

இந்த வகையில் நடப்பாண்டு சீஸனில் இதுவரை சார்தாம் யாத்திரையின் போது உடல்நலக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் 86 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானின் தௌசாவில் சார் தாம் யாத்திரையில் இருந்து பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 20 பேர் காயமடைந்தனர் . தேசிய நெடுஞ்சாலை-21ல் மெஹந்திபூர் பாலாஜி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பிரம்மத் கிராமத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விபத்து ஏற்பட்ட போது, ​​பக்தர்கள் தங்கள் சார்தாம் யாத்திரையின் ஒரு பகுதியாக கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் பயணத்தை முடித்து திரும்பிக் கொண்டிருந்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in