ருந்ததிஹியை மலை கிராமத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் அலுவலர்கள்
ருந்ததிஹியை மலை கிராமத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் அலுவலர்கள்

7ம் கட்ட வாக்குப்பதிவு: இவிஎம் இயந்திரங்களை மலை கிராமத்துக்கு தலையில் தூக்கிச்சென்ற அலுவலர்கள்!

Published on

7ம் கட்ட மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஒடிசாவில் உள்ள மலை கிராமத்துக்கு தேர்தல் பணி அலுவலர்கள், வாக்குப்பதிவு இயந்திரங்களை தலைச்சுமையாக நடந்தே கொண்டு சென்றனர்.

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் மற்றும் 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. 7வது கட்ட மக்களவைத் தேர்தல் நாளை (ஜூன் 1) 57 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற உள்ளது. இதில் ஒடிசாவில் உள்ள 6 மக்களவைத் தொகுதிகள் மற்றும் எஞ்சியுள்ள 42 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஒடிசாவில் கடைசி கட்டத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களின் பங்களிப்பையும் உறுதி செய்வதற்காக தேர்தல் அலுவலர்கள் கடும் வெப்பம், போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கு நடந்தே வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் செல்வது போன்ற பல்வேறு சிரமங்களை பொருட்படுத்தாமல் தேர்தல் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, அம்மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான ருந்ததிஹியை அடைய, ஒரு வாக்குச் சாவடி குழுவினர், ஆபத்தான மலை கிராமம் வழியாக தலைசுமையாக தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கருவிகள், அலுவல் பொருள்களை கொண்டு சென்றனர்.

ருந்ததிஹி மலை கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடி எண் 78ன் (சரஸ்கோனா சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்டது) தலைமை அதிகாரி சுமன் மாஜி கூறுகையில், “ஒவ்வொரு வாக்காளரின் பங்கேற்பையும் உறுதி செய்வதற்காக, வாக்குச்சாவடிக் குழு கடினமான மலை கிராமமான ருந்ததிஹியை வந்தடைந்தது.

மலை கிராமத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் அலுவலர்கள்
மலை கிராமத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் அலுவலர்கள்

நாங்கள் காலை 10 மணியளவில் ராய்ரங்பூரில் உள்ள மையத்திலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் புறப்பட்டோம். ருந்ததிஹி வாக்குச்சாவடிக்கு செல்லும் வழியில் உள்ள பள்ளத்தாக்கில் விபத்து ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டோம். மேலும் எங்கள் வாகனமும் பஞ்சர் ஆனதால், மலைப்பாங்கான கிராமத்தை எங்கள் குழுவினர் நடந்தே வந்தடைந்தனர்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

வேளாங்கண்ணி மாதாவிற்கு தங்ககிரீடம் அணியும் நிகழ்ச்சி... மனமுருக கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை!

விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்து வரும் பிரதமர் மோடி: வெளியானது புது வீடியோ

சாவர்க்கர் குறித்து அவதூறு: ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

பெங்களூரு விமான நிலையத்தில் தட்டித் தூக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா... அதிரடி காட்டிய எஸ்ஐடி!

வரலாறு காணாத வெப்பம்... 19 பேர் சாவு: மருத்துவமனையில் 40 பேர் அனுமதி!

x
காமதேனு
kamadenu.hindutamil.in