ஒடிசா மாநில அரசு கலைப்பு... வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக ஆளுநர் நடவடிக்கை!

மோடி - நவீன் பட்நாயக்
மோடி - நவீன் பட்நாயக்

ஒடிசா மாநிலத்தில் புதிய அரசினை தீர்மானிக்கும் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுவதை முன்னிட்டு, மாநில ஆளுநர் ரகுபர் தாஸ், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான சட்டப்பேரவையை கலைத்து இன்று உத்தரவிட்டார்.

நாடெங்கும் விறுவிறுப்பாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான பல கட்ட வாக்குப்பதிவுகளின் ஊடே சில மாநிலங்களில் மாநிலத்தின் ஆட்சியை தீர்மானிக்கும் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. இந்த வகையில் தெற்கே ஆந்திரா முதல் வடகிழக்கே சிக்கிம் வரை பல மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களும் நடந்து முடிந்துள்ளன. அவற்றில் ஒடிசா மாநிலமும் ஒன்று.

நவீன் பட்நாயக்
நவீன் பட்நாயக்

ஒடிசா மாநிலத்தில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து பாஜக உத்தேசித்த கூட்டணி பலிதமாகவில்லை. பிஜு கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான நவீன் பட்நாயக்கின் வலது கரமாக திகழ்ந்த வி.கே.பாண்டியன் என்பவர் மீது இதற்கான பழி விழுந்தது. நடப்பு ஒடிசா தேர்தலிலும், நவீன் பட்நாயக்கைவிட வி.கே.பாண்டியனை எதிர்த்தே பாஜக அதிகம் களமாடியது.

இதற்கிடையே ஜூன் 4 வாக்குப்பதிவுக்கு முன்னதாக ஒடிசா மாநிலத்தின் 16வது சட்டசபையை ஆளுநர் ரகுபர் தாஸ் இன்று கலைத்தார். முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் இன்று நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில், மாநில சட்டசபையின் 16வது கூட்டத்தொடரை கலைக்க கவர்னர் தாஸுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி ஆளுநர் சட்டப்பேரவையை கலைத்து உத்தரவிட்டார்.

நவீன் பட்நாயக் உடன் வி.கே.பாண்டியன்
நவீன் பட்நாயக் உடன் வி.கே.பாண்டியன்

இம்முறை வென்றால் வெற்றிகரமாக 6வது முறையாக நவீன் பட்நாயக் முதல்வராக பதவியேற்பார். கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளதாலும், நடப்பு ஒடிசா தேர்தல் முடிவுகள் பெறுமளவில் எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளன.

ஒடிசாவின் பிரதான எதிர்க்கட்சியான பாஜக, இந்த முறை ஆளும் பிஜு ஜனதா தளத்திடம் இருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் உள்ளது. மாறாக பிஜு ஜனதா தளம் மீண்டும் ஆட்சியமைத்தால், உடல்நலம் குன்றியுள்ள நவீன் பட்நாயக்கை பெயருக்கு முன்னிறுத்தி, நிழல் முதல்வராக வி.கே.பாண்டியனின் நிழல் ஆட்சி ஒடிசாவில் நடைபெற வாய்ப்பாகும்.

இதையும் வாசிக்கலாமே...

கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!

சென்னையில் இருந்து கிளம்பிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... உடனடியாக இறக்கி விடப்பட்ட 182 பயணிகள்!

5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!

மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in