வெற்றிக்கனி கிட்டுமா? - குலதெய்வக் கோயிலில் பலாப்பழத்துடன் வழிபாடு செய்த ஓபிஎஸ்!

பலாப்பழத்துடன் ஓபிஎஸ் வழிபாடு
பலாப்பழத்துடன் ஓபிஎஸ் வழிபாடு

நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தனது குலதெய்வம் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழிபாடு நடத்தியுள்ளார்.

அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார். இவரது குழுவானது மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.

இந்த தேர்தலில், ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கினார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் ஐயுஎம்எல் கட்சியின் சிட்டிங் எம்.பியான நவாஸ் கனி போட்டியிடுகிறார். மேலும், அதிமுக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் உள்ளன. இந்த தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் பல பன்னீர் செல்வங்கள் களமிறங்கியது அவருக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் தற்போதைய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் ஓபிஎஸ்-சுக்கு சாதகமான செய்திகளை சொல்லவில்லை.

ஓபிஎஸ் வழிபாடு
ஓபிஎஸ் வழிபாடு

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது குலதெய்வக் கோயிலான ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பேச்சி அம்மன் கோயிலில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தான் போட்டியிட்ட சின்னமான பலாப்பழத்தை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார். மேலும், வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலிலும் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, தனது குலதெய்வக் கோயிலான ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு வனப்பேச்சி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வந்திருந்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ இந்த தேர்தல் இந்திய திருநாட்டை யார் ஆள வேண்டும் என்பது பற்றிய தேர்தல். இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். பாரத பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

என்னை பொறுத்தவரை பலன்களை எதிர்பார்த்து கட்சி வேலை செய்பவன் அல்ல, கட்சிக்கு விசுவாசமாக உழைப்பவன். இன்றைய காலகட்டத்தில் நாட்டில் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் இயக்கமாக அதிமுக உரிமை மீட்பு குழு செயல்பட்டு வருகிறது. நான் மத்திய அமைச்சராக வருவது இறைவன் கையில் தான் உள்ளது. அரசியல் நடப்பை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!

சென்னையில் இருந்து கிளம்பிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... உடனடியாக இறக்கி விடப்பட்ட 182 பயணிகள்!

5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!

மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in