உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு: இமாச்சலில் இருந்து கூடுதல் நீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வரும் டெல்லிக்கு இமாச்சலப் பிரதேசத்திலிருந்து 137 கன அடி கூடுதல் நீர் திறக்கவும், தண்ணீர் டெல்லிக்கு சென்றடைவதில் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என ஹரியாணா அரசுக்கும் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கோடைகாலம் மற்றும் கடுமையான வெப்ப அலை காரணமாக தேசிய தலைநகரான டெல்லியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, அண்டை மாநிலங்களான ஹரியாணா, இமாச்சலப் பிரதேச மாநிலங்களிலிருந்து கூடுதல் நீர் பெற்றுத்தர உத்தரவிடக் கோரி, டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு
டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு

இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் பிரசாந்த் கே.மிஸ்ரா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள், இமாச்சலப் பிரதேசத்திலிருந்து 137 கன அடி கூடுதல் தண்ணீர் திறக்க அம்மாநில அரசுக்கும், அந்த தண்ணீர் டெல்லி வஜிராபாத்தை சென்றடைவதில் எந்த இடையூரும் செய்யக்கூடாது என ஹரியாணா அரசுக்கும் உத்தரவிட்டது.

அப்போது, ஹரியாணா அரசு தரப்பு, இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து பெறப்பட்ட கூடுதல் தண்ணீரை அளந்து பிரிக்க எந்த வழிமுறையும் இல்லை என கூறியது. இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், "தண்ணீர் பிரச்சினையில் அரசியல் கூடாது.

நீதிபதிகள் உத்தரவு
நீதிபதிகள் உத்தரவு

இமாச்சலப் பிரதேசத்திலிருந்து பெறப்படும் நீரை, ஹரியாணா அரசு எந்த இடையூறும் இல்லாமல் டெல்லி சென்றடைவதை அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் டெல்லி மக்களுக்கு குடிநீர் கிடைக்கும். கடும் வெயிலால் டெல்லி கடும் குடிநீர் நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஹரியாணாவும் வெப்ப அலையை எதிர்கொள்கிறது.

ஆனால் அங்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக எந்த தகவலும் இல்லை. அதே நேரத்தில் டெல்லியில் தண்ணீர் வீணடிக்கப்படவில்லை என்பதை அம்மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கில் அடுத்த விசாரணை வருவதற்கு முன்பாக வரும் திங்கள்கிழமைக்குள் இது தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஒரே நாளில் தங்கம் விலை ஒரே சவரனுக்கு ரூ.600 உயர்வு... மக்கள் அதிர்ச்சி!

டிரக்கிங் சென்ற கர்நாடகாவை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு!

கடனைத் திருப்பிக் கேட்ட பெண் கொன்று புதைப்பு... 20,000 ரூபாய்க்காக கொடூரம்!

மத்திய அமைச்சர் ஆகிறாரா எச்.டி. குமாரசாமி? குறி வைக்கும் முக்கிய இலாகா!

வைகாசி மாத அமாவாசை... ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

x
காமதேனு
kamadenu.hindutamil.in