இப்படியும் ஒரு எம்பி... வாக்கு எண்ணிக்கை அன்றே மிரட்டி பணம் பறிக்க தொடங்கிய பப்பு யாதவ்!

பிரியங்கா காந்தியுடன் பப்பு யாதவ்
பிரியங்கா காந்தியுடன் பப்பு யாதவ்

பீகாரின் பிரபல அரசியல் தாதா-வான பப்பு யாதவ், தொழிலதிபர் ஒருவரிடம் ரூ1 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததில் காவல்துறை வழக்குக்கு ஆளாகியுள்ளார்.

பீகாரின் பிரபல தாதாக்களில் ஒருவர் பப்பு யாதவ். இதர தாதாக்களுக்கும் இவருக்குமான வித்தியாசம், பப்பு யாதவ் பிரபல அரசியல்வாதியாகவும் இருப்பதுதான். ராஜேஷ் ரஞ்சன் என்ற இயற்பெயர் கொண்ட பப்பு யாதவ் மீது ஏராளமான கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தனிக்கட்சி கண்டது முதல் பீகாரின் பல்வேறு கட்சிகளில் வலம் வந்திருக்கும் இவர், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.

பப்பு யாதவ்
பப்பு யாதவ்

ஆனபோதும் சீட் பிரச்சினையில் சுயேட்சையாக பூர்னியா தொகுதியில் களமிறங்கி வென்றுள்ளார். தேர்தல் முடிவில் வாக்குகள் எண்ணும் நாளான ஜூன் 4 அன்றே தனது வேலையை காட்டியதில், பப்பு யாதவ் மீது தற்போது பீகார் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. பூர்னியா மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ1 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக தற்போது முஃபாசில் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பப்பு யாதவுடன் அவரது உதயாளரான அமித் யாதவ் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

’வாக்கு எண்ணிக்கையில் தான் முன்னிலை வகிப்பதை சுட்டிகாட்டிய பப்பு யாதவ், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிம்மதியாக தொழில் செய்ய வேண்டுமெனில் உடனடியாக ரூ1 கோடியை தரவேண்டும்’ என பூர்னியா மாவட்டத்தை சேர்ந்த ஒரு தொழிபதிபரை மிரட்டியதாக பப்பு யாதவ் மீது வழக்கு பதிவாகி இருக்கிறது. பப்பு யாதவ் சொன்னது போலவே, பூர்னியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட பப்பு யாதவ் 5.67 லட்சம் வாக்குகளுடன் வெற்றி பெற்றிருக்கிறார்.

பப்பு யாதவ் மிரட்டல் விடுப்பதும் பணம் பறிப்பதும் அவரது 30 ஆண்டு அரசியல் தாதா வாழ்க்கையில் சாதாரணமானது. இடையில் 2009 தேர்தல் தவிர்த்து, 1991 முதல் பூர்னியா தொகுதியின் எம்பியாக பப்பு யாதவ் நீடிக்கிறார். மக்களவை உறுப்பினர் என்பது பப்பு யாதவின் சட்டவிரோத செயல்களுக்கு பாதுகாப்பு மட்டுமே. சட்டவிரோத நடவடிக்கைகளி சேர்த்த பணத்தைக் கொண்டு சிரமப்படும் மக்களுக்கு வாரி வழங்கியதில் நிலையான வாக்கு வங்கியையும், பொதுமக்களிடம் நம்பிக்கையையும் பப்பு யாதவ் தக்கவைத்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியில் பப்பு யாதவ்
காங்கிரஸ் கட்சியில் பப்பு யாதவ்

முன்னதாக ஜன் அதிகார் என்ற கட்சியின் தலைவராக இருந்த பப்பு யாதவ், இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பிரகாச எதிர்காலம் உண்டு என்ற கணிப்பில் காங்கிரஸில் தனது கட்சியை கரைத்தார். ஆனால் காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணியில் ஆர்ஜேடி வேட்பாளருக்கு பூர்னியா தொகுதி ஒதுக்கப்பட்டதில், காங்கிரஸை துறந்து சுயேட்சையாக நின்று வென்றுள்ளார்.

ஒரு அரசியல் தாதா வாக்கு எண்ணிக்கை நாளின்போதே தனது மிரட்டல் தொழிலை ஆரம்பித்திருப்பதும், அதற்காக அவர் எம்பியாக பொறுப்பேற்ற சூட்டில் காவல்துறை வழக்குக்கு ஆளாகியிருப்பதும் பீகாருக்கே உரியது. தனக்கு எதிரான காவல்துறை நடவடிக்கையை மோப்பமிட்ட பப்பு யாதவ் நேற்று காங்கிரஸின் கார்கே மற்றும் பிரியங்கா காந்தியை சந்தித்து காங்கிரஸ் கூட்டணிக்கு தனது ஆதரவை நல்கியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in