நீட் பயிற்சி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை; இந்த ஆண்டில் 11வது உயிரிழப்பு

நீட் பயிற்சி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை
நீட் பயிற்சி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை

ராஜஸ்தானின் கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்த, மத்தியப் பிரதேசத்தின் ரேவாவைச் சேர்ந்த 18 வயது மாணவி நேற்று மாலை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இளநிலை மருத்துவ கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வைப்பதற்காக, ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் ஏராளமான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்குள்ள பயிற்சி மையங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிக கட்டணங்கள் செலுத்தி பயிற்சி பெற்று வருகின்றனர்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

இந்நிலையில், நேற்று மாலை, மத்திய பிரதேச மாநிலம், ரேவா நகரைச் சேர்ந்த பாகிஷா திவாரி (18) என்ற நீட் பயிற்சி மாணவி, நேற்று மாலை கோட்டாவின் ஜவஹர் நகர் பகுதியில் தான் தங்கியிருந்த கட்டிடத்தின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இந்நிலையில் மாணவி பாகிஷா திவாரி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இம்மாணவி, தனது தாய், சகோதரருடன் வசித்து வந்தார். இவரது உடல் மஹராவ் பீம் சிங் (எம்பிஎஸ்) மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவியின் தந்தை கோட்டாவுக்கு வந்த பிறகு, பிரேத பரிசோதனை நடத்தப்படும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீட் பயிற்சி பெற்ற வந்த மாணவி பாகிஷா திவாரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

உயிரிழப்பு
உயிரிழப்பு

இருப்பினும் போலீஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டில் கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை தற்போது 11 ஆக உயர்ந்துள்ளது நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் கல்வியாளர்கள், பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஒரே நாளில் தங்கம் விலை ஒரே சவரனுக்கு ரூ.600 உயர்வு... மக்கள் அதிர்ச்சி!

டிரக்கிங் சென்ற கர்நாடகாவை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு!

கடனைத் திருப்பிக் கேட்ட பெண் கொன்று புதைப்பு... 20,000 ரூபாய்க்காக கொடூரம்!

மத்திய அமைச்சர் ஆகிறாரா எச்.டி. குமாரசாமி? குறி வைக்கும் முக்கிய இலாகா!

வைகாசி மாத அமாவாசை... ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in