‘முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்’ - பாஜக கூட்டணியில் வெடிக்கும் கோரிக்கை

முஸ்லிம் இட ஒதுக்கீடு
முஸ்லிம் இட ஒதுக்கீடு

மகாராஷ்டிர மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி, ஆளும் பாஜக கூட்டணியில் இருந்தே அதிருப்திக் குரல் எழுந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான மகா யுதி கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இந்த கூட்டணியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இடம் வகிக்கின்றன. முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட பாஜகவுடன் கூட்டணி அரசை அமைந்திருக்கும், மகாராஷ்டிர என்டிஏ-லிருந்து இந்த ஆட்சேபக் குரல் எழுந்துள்ளது.

மகா யுதி கூட்டணி தலைவர்கள்  தேவேந்திர ஃபட்னசிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார்
மகா யுதி கூட்டணி தலைவர்கள் தேவேந்திர ஃபட்னசிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார களத்தில் முஸ்லிம் இட ஒதுக்கீடும் முக்கிய அம்சமாக இருந்தது. மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு கூடாது என வலியுறுத்திய பாஜக, ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை அபகரித்து இஸ்லாமியருக்கு வழங்கிவிட்டதாக காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சாட்டியது. தற்போது தனிப்பெரும்பான்மையை இழந்து கூட்டணி ஆட்சியை அமைத்திருக்கும் பாஜக, அத்தகைய கூட்டணி சகாக்களிடமிருந்தே முஸ்லிம் இட ஒதுக்கீடு ஆதரவு மற்றும் ஏற்பாடுகளுக்கு மவுன சாட்சியாகி வருகிறது.

பாஜகவின் பிரதான தோழமையான தெலுங்கு தேசம் கட்சி, முஸ்லிம் இடஒதுக்கீடுக்கு ஆதரவு நிலைப்பாடினை எடுத்துள்ளது. இந்த ஆந்திர ஆதரவுக்கு அப்பால் அடுத்த குரல் மகாராஷ்டிராவில் இருந்து எழுந்துள்ளது. “மகாராஷ்டிராவில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், முஸ்லீம் சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தாதது அவமானகரமானது” என அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) துணைத் தலைவர் சலீம் சாரங் கூறியுள்ளார்.

சலீம் சாரங்
சலீம் சாரங்

முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு கோரி தெருவில் இறங்கி போராட்டங்கள் நடத்தப் போவதாகவும் சாரங் தெரிவித்துள்ளார். ’பெரிய கட்சிகள் எதுவும் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தவில்லை. மகாராஷ்டிராவில் ஒரு முஸ்லிம் எம்.பி கூட இல்லை. மத்தியில் ஆட்சி அமைத்திருக்கும் நரேந்திர மோடி அரசில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லை” என்றும் சாரங் கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அக்டோபரில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் சூழலில் சாரங்கின் குரல் அங்கே எதிரொலித்துள்ளது.

”மகாராஷ்டிராவில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், முஸ்லிம் சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது வெட்கக்கேடான செயல். எல்லாக் கட்சிகளும் தேர்தலில் வாக்குகளைப் பெறவே முஸ்லிம்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால், முஸ்லிம்களின் உரிமைகளுக்காக யாரும் போராடுவதாகத் தெரியவில்லை” என்றும் சாரங் தனது கொதிப்பினை பதிவு செய்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in