இந்தியாவைத் தோற்கடித்தால் என் கூட தனியே டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!

நடிகை சேகர் ஷின்வாரி...
நடிகை சேகர் ஷின்வாரி...

இந்தியாவை தோற்கடித்தால் என்னுடன் இரவு உணவு சாப்பிடலாம் என பாகிஸ்தான் நடிகை சேகர் ஷின்வாரி கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், இந்தியா வெற்றி அடைந்தது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நாளை அக்டோபர் 19ம் தேதி இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையில் போட்டி நடைபெற உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி

இந்த ஆட்டத்தில், வங்கதேச அணி இந்தியாவை தோற்கடித்தால் தன்னுடன் இரவு உணவு சாப்பிட வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் ஏற்பாடு செய்வதாக வங்கதேச அணியினருக்கு ஃஆபர் கொடுத்துள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகை சேகர் சின்வாரி. மீன் உணவு சாப்பிட நடிகை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் அரையிறுதி சுற்றில், இந்தியா தோல்வியடைந்து வெளியேறும். நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதி, உலகக்கோப்பை பாகிஸ்தான் வசப்படும். பாபர் அஸாம் உலகக்கோப்பை 2023ன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்படுவார் எனவும் நடிகை சேகர் சின்வாரி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in