3வது முறையாக பிரதமராகும் மோடி; அத்வானி, முரளி மனோகர் ஜோஷியிடம் ஆசி!

பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷியிடம் வாழ்த்து பெற்ற நரேந்திர மோடி
பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷியிடம் வாழ்த்து பெற்ற நரேந்திர மோடி

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார்.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி-க்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மதியம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி-க்கள் குழு தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.

இக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜே.பி.நட்டா மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களான சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்), நிதிஷ்குமார் (ஐக்கிய ஜனதா தளம்), ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா), சிராக் பாஸ்வான் (எல்ஜேபி-ராம் விலாஸ்), எச்.டி.குமாரசாமி (ஜேடிஎஸ்) உள்ளிட்டோர் மற்றும் எம்.பி-க்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தைத் தொடர்ந்து நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து, தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளதை முன்னிட்டு வாழ்த்து பெற்றார்.

இதேபோல் மற்றொரு பாஜக மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷியின் இல்லத்துக்குச் சென்று அவரையும் சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார். அதன் பின்னர், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இல்லத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அவரை ராம்நாத் கோவிந்த் உற்சாகமாக வரவேற்று, மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்கு இனிப்பு ஊட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in