குடியரசுத்தலைவரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி: பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்!

மோடி திரவுபதி முர்மு
மோடி திரவுபதி முர்மு

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி. தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதத்துடன் அவர் ஜனாதிபதியை சந்தித்தார்.

டெல்லியில் இன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், சிவ சேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், என்டிஏ தலைவராக நரேந்திர மோடியை பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் முன்மொழிய அனைவரும் அதை வழிமொழிய மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி. தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதத்துடன் அவர் ஜனாதிபதியை சந்தித்தார். இதனை தொடர்ந்து மோடி ஆட்சியமைக்க முறைப்படி அழைப்பு விடுத்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.

பாஜக கூட்டணி அரசு நாளை மறுநாள் (ஜூன் 9) மாலை 6 மணிக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்க உள்ளது. மோடியுடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது. இதற்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் விழாவில் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் இருக்கைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடி பதவியேற்பு விழாவில் உலக நாடுகளின் பிரதிநிதிகள், பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள், கூட்டணிக்கட்சி தலைவர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

மத்தியில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை. இதனால் பாஜக கூட்டணிக் கட்சிகள் உதவியோடு ஆட்சியமைக்கிறது. இதில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் 12 எம்.பி.க்களும், தெலுங்கு தேசத்தின் 16 எம்.பி.க்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in