'அமரன்’, ‘தங்கலான்’ படங்கள்... ஜிவி பிரகாஷ் சொன்ன சூப்பர் அப்டேட்!

'தங்கலான்’ படத்தில் விக்ரம்
'தங்கலான்’ படத்தில் விக்ரம்

'அமரன்’, ‘தங்கலான்’, ‘லக்கி பாஸ்கர்’ பட அப்டேட்களை இந்தப் படங்களின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ரசிகர்களுக்கு அள்ளி வழங்கியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, நடிகர் விக்ரமின் ‘தங்கலான்’, நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்டப் படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. இந்தப் படங்களின் அப்டேட்ஸை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அப்டேட்ஸை அள்ளி வழங்கியுள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில், ‘’லக்கி பாஸ்கர்’, ‘தங்கலான்’ படங்களின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் முடிவடைந்துள்ளது. தயாரிப்பாளர்களிடமும் இதனைக் கொடுத்துவிட்டேன். சீக்கிரம் சந்திப்போம்’ எனக் கூறியுள்ளார். இதோடு விடாமல் ‘அமரன்’ மற்றும் தனுஷ் இயக்கத்தில் வெளியாகக் காத்திருக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?’ படத்தின் பாடல்கள் பற்றியும் ரசிகர்கள் கேட்டிருக்கின்றனர்.

'அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன்
'அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன்

இதற்கு ஜிவி பிரகாஷ், ‘’அமரன்’ படத்தின் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தயாரிப்பாளர்களின் அப்ரூவலுக்காகக் காத்திருக்கிறேன். ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?’ படத்தில் நான்கு பாடல்கள் உள்ளது. இது இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in