பணத்தைத் திருடியதால் ஆத்திரம்... 9 வயது மகனைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த தாய்!

கொலை செய்யப்பட்ட மகன் அருகே அமர்ந்திருந்த ஷிப்ரா கோயாலா
கொலை செய்யப்பட்ட மகன் அருகே அமர்ந்திருந்த ஷிப்ரா கோயாலா

வீட்டில் வைத்திருந்த பணத்தைத் திருடிய 9 வயது மகனை அவனது தாய் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலம், அகார்தலாவில் உள்ள ஜோயாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷிப்ரா கோயாலா. இவருக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், இவரது கணவர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. கட்டிட வேலை செய்து தனது குழந்தைகளை ஷிப்ரா கோயாலா காப்பாற்றி வந்தார்.

இவரது மகளுக்கு திருமணமான நிலையில், தனது 9 வயது மகன் ராஜ்தீப்புடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவரது மகனை வீட்டில் கழுத்தை நெரித்து சுபர்ணா பால் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கொலை செய்யப்பட்ட உடல் அருகே ஷிப்ரா கோயாலா எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது கணவர் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்ததுடன், கட்டிட வேலை செய்து குடும்பம் நடத்தியுள்ளார். ஆனால், அவரது மகன் படிப்பில் கவனம் செலுத்தாததால் ஷிப்ரா மனஉளைச்சலில் இருந்துள்ளார். இதனால் அவரது மகன் ராஜ்தீப்பை அடிக்கடி அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ஷிப்ரா வீட்டில் வைத்திருந்த பணத்தை அவரது மகன் ராஜ்தீப் திருடியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொலையைச் செய்ததாக வாக்குமூலம் அளித்தார். போலீஸார் அவரை கைது செய்து, பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகனை தாயே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in