ஒடிசாவின் புதிய முதல்வராகிறார் மோகன் சரண் மஜி - நாளை பதவியேற்கிறார்!

மோகன் சரண் மஜி
மோகன் சரண் மஜி

ஒடிசாவின் புதிய முதல்வராக பாஜகவைச் சேர்ந்த மோகன் சரண் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் சட்டப்பேரவைக் குழு தலைவராக மோகன் மஜியை அக்கட்சி எம்எல்ஏக்கள் தேர்வு செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தின் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக, அம்மாநில பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஒடிசா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாஜகவின் மோகன் சரண் மஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் மூத்த தலைவரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையிலான தேர்வுக்குழு மோகன் சரண் மஜியை முதலமைச்சராக தேர்வு செய்து அறிவித்துள்ளது. அதோடு, இரண்டு துணை முதலமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கனக் வர்தன் சிங் தியோவும், பிரவதி பரிதாவும் துணை முதலமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மோகன் சரண் மஜி
மோகன் சரண் மஜி

ஜூன் 12-ம் தேதி அவர் ஒடிசா முதலமைச்சராக மோகன் சரண் மஜி பொறுப்பேற்று கொள்கிறார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் பாஜக அரசு பதவியேற்கும் விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

4 முறை சட்டமன்ற உறுப்பினரான மோகன் சரண் மஜி, மாநிலத்தின் பழங்குடியின மக்களின் தலைவராக உள்ளார். ஒடிசாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கியோஞ்சர் தொகுதியில் போட்டியிட்டு 11 ஆயிரத்து 577 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் மோகன் சரண் மஜி.

ஒடிசாவில் கடந்த 24 ஆண்டுகளாக முதலமைச்சர் பதவியில் இருந்துவந்த நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதளம் கட்சியை, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது. மொத்தமுள்ள 147 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 78 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in