அரசை நடத்த பெரும்பான்மை அவசியமில்லை... ஒருமித்த கருத்து தான் முக்கியம்; பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்.
மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்.

அரசை நடத்த பெரும்பான்மை அவசியம் இல்லை எனவும் ஒருமித்த கருத்து தான் முக்கியம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

என்டிஏ கூட்டணியின் புதிய எம்பிக்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடமான சாமிதான் சதனில் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக மற்றும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் சார்பில் வெற்றி பெற்ற அனைத்து எம்பிகளும் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் நரேந்திர மோடி நாடாளுமன்ற குழுத் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் எம்பி-க்களிடையே பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”அரசு எப்படி நடக்கிறது? எதனால் நடக்கிறது? என்பது இப்போதுதான் மக்களுக்கு தெரிந்துள்ளது. அரசை நடத்துவதற்கு ஒருமித்த கருத்து தான் அவசியம். பெருபான்மை பலம் அல்ல. நாட்டின் வளர்ச்சியில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன். நாடே முதன்மையானது. என்டிஏ கூட்டணி இந்திய வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கூட்டணியாகும். அனைத்து முடிவுகளிலும் ஒருமித்த கருத்தை எட்டுவதே எங்கள் கூட்டணியின் நோக்கம். அனைவருக்குமான ஆட்சி நடத்துவதில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதி கொண்டுள்ளது.” என்றார்.

என்டிஏ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை
என்டிஏ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

மேலும், ”கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் சமமானவையே. வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ், பால் தாக்கரே ஆகியோர் இந்திய கூட்டணிக்கு வித்திட்டனர். சிறந்த நிர்வாகத்திற்கு சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர் உதாரணமாக விளங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து எம்பி-க்கள் கிடைக்காத போதும், பாஜகவிற்கு வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளது. மத்திய மாநில அரசுகளின் தேவைகளுக்கிடையே கருத்து வேற்றுமை கூடாது. வருங்காலத்தில் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது. இது மிகவும் கண்கூடாக தெரிகிறது.” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in