பெரும் மாற்றமின்றி மோடி 3.0 அமைச்சரவை இலாகாக்கள் ஒதுக்கீடு... ஏமாற்றம் யாருக்கு?

மோடி அமைச்சரவையின் பிரதான அமைச்சர்கள்
மோடி அமைச்சரவையின் பிரதான அமைச்சர்கள்

மோடி 3.0 அமைச்சரவையின் இலாக்கா ஒதுக்கீட்டில், பெரும் மாற்றமின்றி மோடி 2.0 பிரதான அமைச்சர்களின் பொறுப்புகள் அவ்வாறே தொடர்கின்றன.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மூன்றாம் முறையாக பதவியேற்றதில் புதிய சாதனை படைத்துள்ளது. மோடி 3.0 அமைச்சரவையில் பெரும் மாற்றங்கள் இருக்கும் என்ற பலரின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. மோடி 2.0 அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்கள் பலரும் தங்களது பழைய பொறுப்பிலேயே தொடர்கின்றனர்.

முக்கிய துறைகளை கைப்பற்ற கூட்டணி கட்சிகள் நெருக்கடி தந்ததன் மத்தியில் நிதி, வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் உள்துறை ஆகிய 4 முக்கிய அமைச்சகங்களை பாஜக தன்னிடமே வைத்துக்கொண்டுள்ளது. அமித் ஷா உள்துறை அமைச்சகத்தையும், ராஜ்நாத் சிங் பாதுகாப்பு அமைச்சகத்தையும், நிர்மலா சீதாராமன் நிதியமைச்சகத்தையும், எஸ் ஜெய்சங்கர் வெளியுறவுத் துறையையும் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

மோடி அமைச்சரவை
மோடி அமைச்சரவை

பியூஷ் கோயல் வர்த்தக இலாகாவை தக்க வைத்துக் கொண்டார். நிதின் கட்கரி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையின் அமைச்சராகத் தொடர்வார். அஜய் தம்தா மற்றும் ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோர் இணை அமைச்சர்களாக சேர்ந்துள்ளனர். ஜெ.பி.நட்டா 2014ல் தான் கவனித்து வந்த சுகாதாரத்துறைக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார்.

அஸ்வினி வைஷ்ணவ், தகவல் தொழில் நுட்பம், ஒலிபரப்பு மற்றும் ரயில்வே என முக்கிய இலாகாக்களை கையாளுவார். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் இருந்து, அமைச்சரவையில் இளம் அமைச்சர்களில் ஒருவரான ராம் மோகன் நாயுடுவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு தொலைத்தொடர்பு அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது .

கிரண் ரிஜிஜு நாடாளுமன்ற விவகாரங்களுக்கு பொறுப்பேற்பார். அத்துறை கவனித்து வந்த பிரகலாத் ஜோஷி இனி உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளை கவனிப்பார்.

மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், முக்கியத்துவம் வாய்ந்த் வேளாண் அமைச்சகத்தை கவனிப்பார். சத்தீஸ்கரின் முன்னாள் முதல்வரான மனோகர் லால் கட்டார் மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் என 2 குறிப்பிடத்தக்க அமைச்சகங்களை நிர்வகிப்பார். இத்துறையின் இணை அமைச்சர்களாக ஸ்ரீபாத் நாயக், டோகன் சாஹூ ஆகியோர் இருப்பார்கள்.

கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பாஜக தலைவர்கள்
கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பாஜக தலைவர்கள்

ஜவுளி துறைக்கு கிரிராஜ் சிங் பொறுப்பேற்றுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு அன்னபூர்ணா தேவி நியமிக்கப்பட்டுள்ளார். மன்சுக் மாண்டவியா தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைக்கு பொறுப்பேற்றுள்ளார். பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பொறுப்பேற்றுள்ளார். ஷோபா கரந்த்லாஜே இத்துறைக்கு இணை அமைச்சராக இருப்பார்.

சிஆர் பாட்டீல் ஜல் சக்தி அமைச்சகத்தை வழிநடத்துவார். பூபேந்திர யாதவ் சுற்றுச்சூழல் அமைச்சராகிறார். பலரது கண்களை உறுத்தும் வகையில் ஜேடிஎஸ் தலைவர் எச்டி குமாரசாமிக்கு கனரக தொழில்கள் மற்றும் எஃகு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களுடன் 30 பேர் கேபினட் அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளது.

மோடி 3.0 அமைச்சரவையில் பெரும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான ஒதுக்கீடுக்கு அப்பால் மோடி 2.0 அமைச்சரவையில் பெரும் மாற்றமின்றி தொடர்ந்துள்ளது. கூட்டணி கட்சிகளின் நெருக்கடி காரணமாக முக்கிய துறைகளை இழக்காதிருப்பதற்காக பெருமளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என பாஜக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கூட்டணி கட்சிகள் மட்டுமன்றி பாஜகவிலும் கணிசமானோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in