அரசுப் பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு சிறப்பு சலுகை - அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

அரசுப் பேருந்தில் பயணிக்கும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகையும், இசைக்கருவிகள் கட்டணமில்லாமல் எடுத்துச் செல்லவும் அனுமதிக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,"தமிழ் நாடு அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் நாட்டுப் புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப் புற கலைஞர்கள் மற்றும் இதரக் கலைஞர்கள் தொழில் முறையாக பயணம் செய்யும்போது 50% பயணக் கட்டணச் சலுகையுடன் பயணம் மேற்கொள்ளவும் மற்றும் அவர்களின் இசைக் கருவிகள், தொழில் கருவிகளை கட்டணமில்லாமல் எடுத்துச் செல்லவும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சலுகைகளை எந்த தொய்வும் இன்றி முறையாக வழங்கவேண்டும்.

அரசுப்பேருந்துகள்
அரசுப்பேருந்துகள்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் நாட்டுப் புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப் புற கலைஞர்கள் மற்றும் இதரக் கலைஞர்கள் தொழில் முறையாக பயணம் செய்யும்போது 50% பயணக் கட்டணச் சலுகையுடன் பயணம் மேற்கொள்ளவும் மற்றும் அவர்களின் இசைக் கருவிகள்/தொழில் கருவிகளை கட்டணமில்லாமல் எடுத்துச் செல்லவும், அரசாணைகள் 1992, 1993, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் நாடகம் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு ஏற்கெனவே 50 சதவிகித கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கலைஞர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளை அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கட்டணமில்லாமல் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆடை அணிகலன்கள், ஒப்பனைப் பொருட்கள், இசை வாத்தியக் கருவிகள், ஆர்மோனியம், தபேலா, டோலக், மிருதங்கம், நையாண்டி மேளம், நாதஸ்வரம், பம்பை, உறுமி. உடுக்கை, தவில், கொல்லிக் கட்டை, தப்பாட்டம், மாடு ஆட்டம், மயில் ஆட்டம், காவடி ஆட்டம், கரகம் ஆட்டம், பொய்கால் குதிரை மற்றும் இதர சிறிய அளவிலான கருவிகள் பேருந்தில் எடுத்து செல்லலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டுப் புற கலைஞர்கள், இதரக் கலைஞர்கள் மற்றும் இசைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், கலைஞர்களின் வாழ்க்கையில் மேலும் முன்னேற்றம் அடையவேண்டும் என்று ஊக்கம் அளித்து, உறுதுணையாக இருக்கிறது இந்த அரசு.

இனி வரும் காலங்களில், இது போன்ற ஒரு நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்கவேண்டும் என்பதற்காக அனைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாடகக் கலைஞர்கள் எடுத்து வரும் கலைப் பொருட்கள் பிற பயணிகளுக்கு இடையூறுகள் இல்லாதபடி பாதுகாப்பான முறையில் வைக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகத்தில் இன்று முதல் 21-ம் தேதி வரை இடியுடன் மழை பெய்யும்... வெயிலும் 5 டிகிரி அதிகமாக இருக்கும்!

நெடுந்தீவு அருகே பரபரப்பு... தமிழக மீனவர்கள் 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்த இலங்கை கடற்படை!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் வரலாற்றுச் சாதனை!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கைவிட வேண்டும்... ராகுலை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தல்!

சோகம்... ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தங்கைகள் 4 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in