மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

நீட் தேர்வில் குளறுபடிகள் இல்லை; நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்போம்... மத்திய அமைச்சர் உறுதி!

Published on

நீட் தேர்வு விவகாரத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஏற்போம் எனவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி அளித்துள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதாக மாணவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியானது, தேர்வு முடிவுகளில் ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றது, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது ஆகியவை விவாதப்பொருளாகி உள்ளது. இதனை மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தேசிய தேர்வு முகமை உரிய விளக்கம் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் நீட் கலந்தாய்விற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறும் போது, ”நீட் தேர்வில் மாணவர்கள் சந்தித்த சவால்கள், பிரச்சினைகள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படும். நீட் தேர்வை பொறுத்தவரை 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 1500 மாணவர்கள் மட்டுமே பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர். அரசு இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பதிலளிக்க தயாராக இருக்கிறது.” என்றார்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

மேலும், “நாடு முழுவதும் நீட், க்யூட், ஜேஇஇ உள்ளிட்ட முக்கிய தேர்வுகளை தேசிய தேர்வு முகமை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. கண்டிப்பாக நீட் விவகாரத்தில் மத்திய அரசு துணை நிற்கும். பாதிக்கப்பட்ட மாணவர்களை மத்திய அரசு ஒருபோதும் கைவிடாது. உரியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம் நீதிமன்றம் வழங்கும் எந்த தீர்ப்பாக இருந்தாலும் அதனை பின்பற்ற மத்திய அரசு தயாராக இருக்கிறது.” என்றார். இதனிடையே கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மட்டும் மறுத்தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

பயணம் தொடங்கியது... ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி இன்று புறப்படுகிறார் மோடி!

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டியில் பரபரப்பு... 23 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு... 41 பேர் இந்தியர்கள்!

அதிர்ச்சி வீடியோ... பெட்ரோல் நிரப்பும் போது செல்போன் பயன்பாடு: தீப்பிடித்ததால் அலறிய வாகன ஓட்டி!

இரண்டாவது திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சீரியல் நடிகை... ரசிகர்கள் வாழ்த்து!

x
காமதேனு
kamadenu.hindutamil.in