நாளை நடைபெற இருந்த ’செட்’ தேர்வுகள் திடீரென ஒத்திவைப்பு... இது தான் காரணமா?

செட் தேர்வுகள் ஒத்திவைப்பு
செட் தேர்வுகள் ஒத்திவைப்பு

பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணிக்கான ’செட்’ தேர்வுகள் நாளை துவங்க இருந்த நிலையில் திடீரென இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்ற விரும்பும் உதவி பேராசிரியர்களுக்காக தமிழ்நாடு அரசின் சார்பில் செட் எனப்படும் மாநில தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு செட் தேர்வுகள் ஜூன் மாதம் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

இந்த தேர்வுகளில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதும் இருந்து ஒன்றரை லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு நாளை துவங்கயிருந்த நிலையில், திடீரென தற்போது இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செட் தேர்வுகள்
செட் தேர்வுகள்

இது தொடர்பாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சாக்ரடீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘நாளை துவங்கியிருந்த செட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. தொழில்நுட்ப காரணங்களால் இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஒரே நாளில் தங்கம் விலை ஒரே சவரனுக்கு ரூ.600 உயர்வு... மக்கள் அதிர்ச்சி!

டிரக்கிங் சென்ற கர்நாடகாவை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு!

கடனைத் திருப்பிக் கேட்ட பெண் கொன்று புதைப்பு... 20,000 ரூபாய்க்காக கொடூரம்!

மத்திய அமைச்சர் ஆகிறாரா எச்.டி. குமாரசாமி? குறி வைக்கும் முக்கிய இலாகா!

வைகாசி மாத அமாவாசை... ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in