மணிப்பூரில் அதிர்ச்சி: முதல்வர் பிரேன் சிங் பாதுகாப்பு வாகனத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்; பாதுகாப்பு அதிகாரி காயம்!

மணிப்பூர் முதல்வர் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்
மணிப்பூர் முதல்வர் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்

மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங்கின் பாதுகாப்பு வாகனத்தில் இன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.

மணிப்பூர் மாநிலம், காங்கோக்பி மாவட்டத்தில் அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங் சென்று கொண்டிருந்தார். அப்பேது அவரது பாதுகாப்பு வாகனங்களை (கான்வாய்) குறி வைத்து, தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பாதுகாப்பு அதிகாரி காயமடைந்தார்.

முதல்வரின் கான்வாய், காலை 10:30 மணியளவில் இம்பாலில் இருந்து ஜிரிபாம் மாவட்டத்துக்கு தேசிய நெடுஞ்சாலை-37ல் சென்று கொண்டிருந்தன.

அப்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஜிரிபாம் பகுதியில் கடந்த 6ம் தேதி அன்று அடையாளம் தெரியாத தாக்குதல்தாரிகளால் ஒரு நபரின் தலை துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்குப் பின்னர் அப்பகுதியில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது.

இதன் காரணமாக ஜிரிபாமுக்குச் செல்ல முதல்வர் பிரேன் சிங் திட்டமிட்டிருந்தார். வன்முறை காரணமாக ஜிரிபாமில் சில அரசு அலுவலகங்கள் உள்பட சுமார் 70 வீடுகள் எரிக்கப்பட்டன. மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இச்சூழலில் முதல்வர் பிரேன் சிங், இப்பகுதிக்கு நாளை வருகை தர திட்டமிட்டிருந்தார்.

மணிப்பூர் முதல்வர்  பிரேன் சிங்
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்

இந்நிலையில் தற்போது முதல்வரின் கான்வாய் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில், பிஷ்ணுபூர் மாவட்டத்தின் தங்க நாகரம் லெய்காயைச் சேர்ந்த மொய்ரங்தேம் அஜேஷ் (32) என்பவர் வலது தோள்பட்டையின் பின்புறத்தில் குண்டு பாயந்தது. இதைத் தொடர்ந்து அவர் இம்பாலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in