மலையில் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம்... துணை அதிபர் உட்பட 10 பேர் பலியானதை உறுதி செய்தது மலாவி

விபத்துக்குள்ளான விமானம் மற்றும் சவுலோஸ் சிலிமா
விபத்துக்குள்ளான விமானம் மற்றும் சவுலோஸ் சிலிமா

மலாவி துணை அதிபர் உட்பட 10 பேர் பயணித்த ராணுவ விமானம் நேற்று மாயமான நிலையில், அந்த விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியிருப்பதும், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததும் இன்று உறுதி செய்யப்பட்டது.

மலாவியின் துணை அதிபர் சவுலோஸ் சிலிமா, அவரது மனைவி மற்றும் எட்டு பேர் பயணித்த ராணுவ விமானம் சிக்கங்காவா மலைத்தொடரில் விபத்துக்குள்ளானது என்றும், இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 10 பேர் பலியானதாகவும் மலாவி அதிபர் லாசரஸ் சக்வேரா இன்று தெரிவித்தார்.

விபத்து நிகழ்விடம்
விபத்து நிகழ்விடம்

இது தொடர்பாக சக்வேரா, “நடந்திருக்கும் சம்பவம் மிகவும் சோகமாக மாறி உள்ளது. தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் விமானத்தை மலைத்தொடரில் கண்டுபிடித்துள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் எவரும் இன்றி அழிந்ததை அவர்கள் உறுதி செய்துள்ளனர். அனுபவமிக்க பைலட்கள் விமானத்தை கையாண்ட போதும், லிலோங்வேக்கு திரும்பும் விமானத்தில் ஏதோ குழப்பம் ஏற்பட்டது விபத்துக்கு காரணமாகி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மலாவியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அதிபர் வேட்பாளராக களமிறங்க சிலிமா காத்திருந்தார். ஆனால் எதிர்பாரா விமான விபத்து தேசத்தின் அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று காணாமல் போன ராணுவ விமானம் மோசமான வானிலை காரணமாக அது தரையிறங்க வேண்டிய விமான நிலையத்தை தவிர்த்துவிட்டு லிலாங்வேக்கு திரும்பும்படி உத்தரவிடப்பட்டது.

ஆனால் ரேடாரில் இருந்து விலகிச் சென்றதால் விமான அதிகாரிகளால் அதைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. முழு நாள் தேடலுக்குப் பின்னர், ராணுவ விமானத்தின் சிதிலங்களை மலைப்பகுதிகளில் அடையாளம் கண்டனர். அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் பலியானதாகவும், அங்கு விரைந்திருக்கும் ராணுவத்தினர் பலியான சடலங்களின் எச்சங்களை தலைநகருக்கு சேகரித்து வருவதாகவும் அதிபர் சக்வேரா கூறியுள்ளார்.

மனைவி மேரியுடன் சவுலோஸ் சிலிமா
மனைவி மேரியுடன் சவுலோஸ் சிலிமா

நேற்றைய தினம் மலாவியில் ராணுவ விமானம் காணாமல் போன பிறகு, அதனை தேடுவதில் போதிய தொழில்நுட்பம் இல்லாததில் தேடும் பணிகள் முடங்கின. அமெரிக்கா உட்பட பல நாடுகள் தேடுதல் நடவடிக்கைகளுக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கியதும், விமானத்தை தேடும் பணி வேகமெடுத்தது.

51 வயதான சிலிமா, 2025ம் ஆண்டு மலாவியில் நடக்கவிருக்கும் அதிபர் வேட்பாளர்களில் முதன்மையானவர் என்பதால் அவரது மரணத்துக்கு காரணமான விமான விபத்தை விரிவாக ஆராயுமாறும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக அரசாங்க ஒப்பந்தங்களுக்காக அவர் ஒரு தொழிலதிபரிடமிருந்து லஞ்சம் பெற்றதாக வந்த செய்திகளுக்கு மத்தியில், அவர் 2022-ல் கைது செய்யப்பட்டார். எனினும் குற்றச்சாட்டை சிலிமா மறுத்தார். துணை ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சென்ற மாதம் அரசு தரப்பில் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in