ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம்

வைகுண்ட ஏகாதசி | திருச்சியில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு இன்று டிசம்பர் 23ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பரமபத வாசல் வழி வரும் பெருமாள்
பரமபத வாசல் வழி வரும் பெருமாள்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு நேற்று மாலை முதலே ஸ்ரீரங்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், உள்ளூர் திருவிழாவில் கலந்து கொள்ள வசதியாகவும் இன்று டிசம்ப்கர் 23ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீரங்கம் கோயில்
ஸ்ரீரங்கம் கோயில்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், ரத்தின அங்கி, கிளி மாலை, பாண்டியன் கொண்டை ஆகிய சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, சந்தன மண்டபம், ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாழிக்கோட்டான் வாயில், தங்கக் கொடிமரம் வழியாக, பிரதட்சணமாக இரண்டாம் பிரகாரமான குலசேகரன் திருச்சுற்று வழியாக விரஜா நதி மண்டபத்தை வந்தடைந்தார். இதைத் தொடர்ந்து அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக நம்பெருமாள் வெளியே வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து ரெங்கநாதரை தரிசித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...


ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு... விண்ணை பிளந்த கோவிந்தா... ரங்கா கோஷம்!

அதிர்ச்சி... 8வது மாடியிலிருந்து அறுந்து விழுந்த லிப்ட்; உயிருக்கு போராடும் 5 ஊழியர்கள்

47 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

2023 Rewind | சிவகார்த்திகேயன் முதல் த்ரிஷா வரை... பிரபலங்களைச் சுழற்றியடித்த சர்ச்சைகள்!

பாலச்சந்தர் நினைவு தின பகிர்வு | விசிட்டிங் கார்டு கொடுத்த எம்.ஜி.ஆர்... வளர்த்தெடுத்த நட்சத்திரங்கள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in