குமாரசாமிக்கு கனரக தொழில்; தெலுங்கு தேசம் அமைச்சருக்கு விமானப் போக்குவரத்து: கூட்டணிக் கட்சி அமைச்சர்களின் இலாகாக்கள் விவரம்!

சிராக் பஸ்வான் குமாரசாமி ஜிதன்ராம் மஞ்சி
சிராக் பஸ்வான் குமாரசாமி ஜிதன்ராம் மஞ்சி

மத்தியில் புதிதாக அமைக்கப்பட்ட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இலாகா விவரங்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நேற்று பதவியேற்றார். அவருடன் 30 கேபினட் அமைச்சர்கள், 36 இணையமைச்சர்கள், மற்றும் தனிப் பொறுப்புடன் கூடிய ஐந்து இணையமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர். இதில் ஐந்து கேபினட் அமைச்சர்கள் உட்பட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பதினொரு அமைச்சர்கள் உள்ளனர். கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இலாகா விவரங்கள்:

மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை
மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை

கேபினட் அமைச்சர்கள்:

1) கூட்டணிக்கட்சிகளில் முக்கியமான தெலுங்கு தேசம் கட்சியின் அமைச்சரான கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

2) பீகாரின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சாவைச் சேர்ந்த ஜிதன் ராம் மஞ்சிக்கு மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

3) ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சனுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

4) மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஹெச்டி குமாரசாமிக்கு மத்திய கனரக தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

5) லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சிராக் பஸ்வானுக்கு மத்திய உணவு பதப்படுத்துதல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தெலுங்குதேசம் அமைச்சர்கள்
தெலுங்குதேசம் அமைச்சர்கள்

இணையமைச்சர்கள்:

1) ஆர்எல்டி கட்சியைச் சேர்ந்த ஜெயந்த் சவுத்ரிக்கு தனிப்பொறுப்புடன் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

2) இந்திய குடியரசு கட்சியின் ராம்தாஸ் அதவாலேக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

3) ஐக்கிய ஜனதா தளத்தின் ராம்நாத் தாக்கூருக்கு மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

4) தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த சந்திர சேகர் பெம்மாசானிக்கு மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

5) ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியைச் சேர்ந்த பிரதாப்ராவ் ஜாதவுக்கு தனிப்பொறுப்புடன் கூடிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

6) அப்னாதளம் கட்சியைச் சேர்ந்த அனுப்ரியா படேல் மத்திய உடல்நலம் மற்றும் குடும்ப நலன் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

இரண்டு கட்டங்களாக நடக்கும் கல்வி விருது விழா...தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு!

கவுண்டமணி - செந்திலை கலாய்த்த நடிகர் விஜய்...வைரல் வீடியோ!

மோடி 3.0 அமைச்சரவை: இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு; கேபினட் பதவி கேட்டு அஜித் பவார் என்சிபி குமுறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in