பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொல்லும் திட்டத்தில் சிறுவர்கள்... லாரன்ஸ் பிஷ்னோய் - கோல்டி பிரார் கூட்டணி பகீர்

சல்மான் கான் கொலை முயற்சியில் கூட்டு சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் - கோல்டி பிரார்(கீழ்)
சல்மான் கான் கொலை முயற்சியில் கூட்டு சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் - கோல்டி பிரார்(கீழ்)

பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொல்லும் முயற்சியில் கைகோத்த லாரன்ஸ் பிஷ்னோய் - கோல்டி ப்ரார் கும்பல் தொடர்பான பகீர் தகவல்கள் தினம் ஒன்றாக வெளிப்பட்டு வருகின்றன.

சல்மான்கானை கொல்வதற்காக 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை பணியில் அமர்த்தி பயிற்சி தர, லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் கூட்டணி முடிவு செய்திருந்தது போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஏப்ரல் 14 அன்று, மும்பையின் பாந்த்ராவில் உள்ள சல்மான்கானின் வீட்டுக்கு வெளியே பைக்கில் வந்த இருவர் பல ரவுண்டுகள் சுட்டனர். இதனையடுத்து போலீஸார் மேற்கொண்ட துரித நடவடிக்கையில் துப்பாக்கிச் சூடு நடத்திய விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகியோர் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு ஆயுதங்களை வழங்கியதாகக் கூறப்படும் இருவர் பஞ்சாபில் கைது செய்யப்பட்டனர். அந்த இருவரில் தபன் என்பவர் போலீஸ் லாக்-அப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மும்பையில் உள்ள சல்மான் கான் வீடு
மும்பையில் உள்ள சல்மான் கான் வீடு

இவை உட்பட நாளொரு கைது பொழுதொரு மர்மம் என சல்கான்கான் கொலை முயற்சி வழக்கில், பாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் வகையில் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

அவற்றில் ஒன்றாக சல்மான்கானை கொல்லும் முயற்சியில் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி பிரார் கும்பல், சிறார்களை வேலைக்கு அமர்த்தி பயிற்சி அளித்ததாக போலீஸார் கண்டறிந்துள்ளனர். சல்மான்கான் மீதான துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு சந்தேகம் எழாதிருக்க, சிறார்களை பயன்படுத்த பிஷ்னோய் - பிரார் அணி முடிவு செய்திருந்தது.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த அஜய் காஷ்யப்பிற்கும் மற்றொரு குற்றவாளிக்கும் இடையே நடந்த வீடியோ உரையாடலை நவி மும்பை போலீசார் கண்டறிந்ததில், இந்த பகீர் உண்மை வெளிப்பட்டுள்ளது. அதன்படி நவீன ஆயுதங்களில் பயிற்சி பெற்ற ஷார்ப் ஷூட்டர்கள், கனடாவில் மறைந்திருக்கும் கேங்ஸ்டர் கோல்டி பிராரின் உத்தரவின்படி மும்பை, தானே, நவி மும்பை, புனே, ராய்காட் மற்றும் குஜராத்ஜின் பல இடங்களில் செயல்பட்டனர்.

சல்மான் கான்
சல்மான் கான்

குஜராத் சபர்மதி சிறையிலிருக்கும் பிஷ்னோய்க்கும் இவை தொடர்பான தகவல்கள் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு வந்துள்ளன. இதில் ஜான் என்ற நபர் கொலைத்தாக்குதலுக்கான வாகனத்தை வழங்கும் பணியில் ஈடுபட்டார். தாக்குதலுக்குப் பிறகு, கொலைக்கும்பல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிதறியோடி சில காலத்துக்கு பதுங்கியிருக்கும். பின்னர் கன்னியாகுமரியில் மீண்டும் ஒரே குழுவாகி, தொடர்ந்து கடல் வழியாக இலங்கைக்கு செல்லத் திட்டமிட்டிருந்தனர். அங்கிருந்து, கனடாவுக்கு பறக்கவும் அவர்கள் முடிவு செய்திருந்தனர்.

முன்னதாக, லாரன்ஸ் பிஷ்னோய் உத்தரவின் பேரில் சல்மான் கானின் பாந்த்ரா இல்லம், பன்வெல் பண்ணை வீடு மற்றும் திரைப்பட படப்பிடிப்பு இடங்கள் ஆகியவற்றில், சல்மானின் நடமாட்டத்தைக் கண்காணிக்க சுமார் 70 பேர் நியமிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!

சென்னையில் இருந்து கிளம்பிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... உடனடியாக இறக்கி விடப்பட்ட 182 பயணிகள்!

5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதிக்கு திரும்பிய யானை!

மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in