ஒன்றாக இணைவோம் என்று சொல்ல ஓபிஎஸ்சுக்கு தார்மீக உரிமை இல்லை... கே.பி.முனுசாமி காட்டம்!

அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி
அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி

அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைவோம் என்று சொல்வதற்கு ஓ.பன்னீர் செல்வதற்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் இல்லை என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முனுசாமி, “அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைவோம் என்று சொல்வதற்கு ஓ.பன்னீர்செல்வதற்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் இல்லை. அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்தபோது, அதற்கு முக்கிய கருவியாக இருந்து அதிமுகவிற்கு மேலும் மேலும் சோதனைகளை கொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக தொண்டர்கள் கோயிலாக வணங்கும் அதிமுக தலைமை கழக அலுவலகத்தை குண்டர்கள் உதவியோடு சூறையாடிச் சென்றவர் ஓ.பன்னீர்செல்வம்” என்றார்.

ஓபிஎஸ், அண்ணாமலை (கோப்பு படம்)
ஓபிஎஸ், அண்ணாமலை (கோப்பு படம்)

மேலும், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையோடு, கைகோர்த்துக் கொண்டார். தன் சுயநலத்திற்காக அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர் தான் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக கட்சியை முடக்க முயற்சித்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு, அனைவரும் ஒன்றிணைவோம் வா என அழைப்பு விடுப்பதற்கு எந்த ஒரு அருகதையும் இல்லை” என்றார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in