ஃபேஸ்புக் பழக்கம்... வைரலான இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்கள்: போலீஸ் அதிர்ச்சி!

கைது செய்யப்பட்ட கண்ணன் என்ற  சுஜின்பாபு.
கைது செய்யப்பட்ட கண்ணன் என்ற சுஜின்பாபு.

ஃபேஸ்புக் மூலம் பழகிய இளம்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்கள் மூலம் முன்பின் தெரியாத நபர்களுடன் ஏற்படும் பழக்கம் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதற்கு கோட்டயத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு நிகழ்ந்த சம்பவமே சாட்சியாக உள்ளது. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி அவர்களை ஏமாற்றி பணத்தை மட்டுமின்றி, அவர்களை ஆபாசமாகவும் சித்தரிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சைபர் க்ரைம் குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலும் தப்பி விடும் நிலையில், கோட்டயத்தில் ஒருவர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார்.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எருமேலி கரிநிலம் பகுதியில் உள்ள புதுபரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் என்ற சுஜின்பாபு(42). இவர் ஃபேஸ்புக் மூலம் இளம்பெண் ஒருவருடன் அறிமுகமாகியுள்ளார். சமூக ஊடகத்தில் இருந்த நட்பு பின்பு தொலைபேசி மூலமாக தொடர்நதுள்ளது. இதன்பின் அந்த இளம்பெண்ணை கண்ணன் நேரடியாக சந்தித்துப் பேசியுள்ளார்.

அப்போது அவர்களுக்குள் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். அப்போது அந்த இளம்பெண்ணுக்குத் தெரியாமல் கண்ணன் புகைப்படங்கள் எடுத்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் கண்ணன் பதிவிட்டார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண், இதுகுறித்து முண்டக்காயம் போலீஸில் புகார் செய்தார். இப்புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், கண்ணன் என்ற சுஜின்பாபுவை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் எரிமேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அண்ணாமலை ஜெயிப்பார்... பந்தயத்தில் தோற்றதால் நடுரோட்டில் அமர்ந்து மொட்டையடித்துக் கொண்ட பாஜக பிரமுகர்!

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுமா? - சத்யபிரதா சாஹு பதில்!

மயக்க ஊசி போட்டதால் உயிரிழந்த 7 வயது சிறுவன்... அறுவை சிகிச்சையில் விபரீதம்!

அண்ணாமலை அதிகமாகவே பேசிட்டார்... கூட்டணி இருந்தால் 35 தொகுதிகள் வரை கிடைத்திருக்கும்; எஸ்.பி.வேலுமணி கருத்து!

பிறந்த நாள் விழாவில் பயங்கர மோதல்... கல்லூரி மாணவர் குத்திக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in