தேர்தலில் இனிமேல் போட்டியிட மாட்டேன்... கேரளா காங்கிரஸ் வேட்பாளர் தடாலடி அறிவிப்பு!

முரளிதரன்
முரளிதரன்

திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்ற நிலையில், அத்தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் முரளிதரன் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று முரளிதரன் அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. அதில், அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளில் தயவால் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்க உள்ளது.

சுரேஷ் கோபி
சுரேஷ் கோபி

இதனிடையே, கேரளாவில் இதுவரை கால் பதிக்காத பாஜக முதல் முறையாக ஒரு மக்களவைத் தொகுதியைப் பிடித்துள்ளது. கேரளா மாநிலம், திருச்சூர் மக்களவைத் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி, பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் 4,00,553 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.சுனில் குமார் 3,27,405 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.முரளிதரனுக்கு 3,19,380 வாக்குகள் கிடைத்தது.

அவர் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என திருச்சூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முரளிதரன் அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வடகரா தொகுதியில் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன். இடதுசாரி வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தால் இவ்வளவு ஏமாற்றத்தை உணர்ந்திருக்க மாட்டோம்.

ராகுல் காந்தியுடன் முரளிதரன்.
ராகுல் காந்தியுடன் முரளிதரன்.

நடிகர் சுரேஷ் கோபியை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி மூன்று முறை திருச்சூருக்கு வந்து பிரச்சாரம் செய்தார். சுனில்குமாருக்கு ஆதரவாக பினராயி விஜயன் பிச்சாரம் செய்தார். ஆனால், டி.கே.சிவகுமாரை தவிர எந்தத் தேசியத் தலைவர்களும் எனக்காக பிரச்சாரம் செய்ய வரவில்லை. ஆனால் வேறு சிலர் வந்திருக்கலாம். தேர்தலில் போட்டியிடும் மனநிலையை இழந்து விட்டதால், இனி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். சில காலம் பொது வாழ்வில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளேன்” என்று கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

ஒரே நாளில் தங்கம் விலை ஒரே சவரனுக்கு ரூ.600 உயர்வு... மக்கள் அதிர்ச்சி!

டிரக்கிங் சென்ற கர்நாடகாவை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு!

கடனைத் திருப்பிக் கேட்ட பெண் கொன்று புதைப்பு... 20,000 ரூபாய்க்காக கொடூரம்!

மத்திய அமைச்சர் ஆகிறாரா எச்.டி. குமாரசாமி? குறி வைக்கும் முக்கிய இலாகா!

வைகாசி மாத அமாவாசை... ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in