விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு முதலுதவி செய்த எம்.பி மஞ்சுநாத்.
விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு முதலுதவி செய்த எம்.பி மஞ்சுநாத்.

பெங்களூருவில் விபத்தில் சிக்கிய பெண்; முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய எம்.பி!

Published on

பெங்களூருவில் சாலை விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் எம்.பியான மருத்துவர் சி.என்.மஞ்சுநாத் சிகிச்சை அளிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவின் புகழ்பெற்ற இருதயநோய் நிபுணர் சி.என். மஞ்சுநாத். இவர் பெங்களூருவில் உள்ள ஜெயதேவா மருத்துவமனையின் இயக்குநராக பல ஆண்டுகள் இருந்தார். அப்போது ஏராளமான ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்து பெரும் புகழ் பெற்றார்.

டாக்டர் மஞ்சுநாத், டி.கே.சுரேஷ்
டாக்டர் மஞ்சுநாத், டி.கே.சுரேஷ்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெங்களூரு ஊரக தொகுதியில் பாஜக கூட்டணியின் மஜத வேட்பாளராக மருத்துவர் சி.என்.மஞ்சுநாத் போட்டியிட்டார். கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷை ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மஞ்சுநாத் வெற்றி பெற வைத்தார். இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ராமநகரில் உள்ள கனக்புரா- சாத்தனூர் வழித்தடத்தில் காரில் மருத்துவரான எம்.பி மஞ்சுநாத் சென்று கெர்ண்டிருந்தார். அப்போது சாலையில் சிக்கிய பெண் ஒருவர் துடித்துக் கொண்டிருந்தார். அதைக் காரில் சென்ற போது பார்த்த மஞ்சுநாத், அந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். அத்துடன் அந்த பெண்ணை சோதனை செய்த பின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

டாக்டர்  சி.என்.மஞ்சுநாத்
டாக்டர் சி.என்.மஞ்சுநாத்

மேலும் அந்த மருத்துவமனையின் மருத்துவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உரிய சிகிச்சை அளிக்குமாறு மஞ்சுநாத் கேட்டுக் கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விபத்தில் சிக்கிய பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய மஜத எம்.பியின் மனிதாபிமான செயலுக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்..

இதையும் வாசிக்கலாமே...

திருநங்கைகளுக்கு அனைத்து அரசு பணிகளிலும் 1 சதவீத இடஒதுக்கீடு... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து... 4 பேர் பலி; பலர் படுகாயம்

சவுதி அரேபியாவில் கடும் வெப்பம்: ஹஜ் பயணம் சென்ற 19 யாத்ரீகர்கள் உயிரிழப்பு!

5 மாடுகளின் உயிரைப் பறித்த பரோட்டா... கொல்லம் அருகே பரிதாபம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்ததால் பரபரப்பு: இளைஞர் படுகாயம்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in