டிகிரி காபிக்கு இவ்ளோ மவுசா... அதிகம் பேர் விரும்பும் காபி பட்டியலில் இரண்டாமிடம்!

பில்டர் காபி
பில்டர் காபி
Updated on
2 min read

உலகின் சிறந்த காபிகள் பட்டியலில் இந்தியாவின் ‘ஃபில்டர்’ காபிக்கு இரண்டாம் கிடைத்துள்ளதாக 'டேஸ்ட் அட்லஸ்' என்ற உணவு நிபுணத்துவ அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

காலையில் எழுந்ததும் பெரும்பாலானோர் விரும்புவது காபி அல்லது டீயைத்தான். “ காலையில் எழுந்ததும் காபி அல்லது டீ குடிக்கலைன்னா எனக்கு வேலையே ஓடாது” என்று சொல்லும் பலரை நாம் பார்த்திருக்கிறோம் அந்த அளவுக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் பலரை கட்டுக்குள் வைத்துள்ளது காபியும், டீயும். அதிலும் குறிப்பாக, காபி என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம். காபியில் ஃபில்டர் காபி, எஸ்ப்ரஸோ, கேப்பச்சினோ, லாட்டே, மச்சியாட்டோ, ஐரிஷ், ட்ரசிஸ், கஃபைன் நீக்கப்பட்டது மற்றும் இன்ஸ்டன்ட் எனப் பல வகைகள் உள்ளன.

இந்நிலையில் உலகளவில் பிரபலமான ‘டேஸ்ட் அட்லஸ்’ என்ற அமைப்பு உள்ளூர் உணவு முதல் உலகளவிலான உணவு தொடர்பான ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பு உலகின் சிறந்த 38 காபிகளின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் முதலிடத்தில் 'கியூபன் எஸ்பிரெசோ' முதலிடத்திலும், 'சவுத் இந்தியன் ஃபில்டர் காபி' இரண்டாவது இடத்திலும் உள்ளன.

கியூபன் எஸ்பிரேஸோ காபி
கியூபன் எஸ்பிரேஸோ காபி

தொடர்ந்து சிறந்த 10 காபிகளின் தரவரிசை பட்டியலில் கிரீஸ் நாட்டிலிருந்து வெளியாகும் இஸ்பிரஸ்ஸோ பெர்டோ, பெர்டோ கப்சீனோ, புரோப்பே காபி ஆகிய மூன்று நிறுவனங்களின் காபிகள் மூன்று , நான்கு மற்றும் ஒன்பதாவது இடங்களை பிடித்துள்ளது. இதில் முதலிடம் பிடித்த கியூபன் எஸ்பிரேஸோ காபி, சர்க்கரையைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இனிப்பு எஸ்பிரெசோ ஷாட்டைக் கொண்டுள்ளது. இதனால் இந்த வகை காபி உலகின் பெரும்பாலானோருக்கு பிடித்த வகை காபியாக உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  

எரிவாயு சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைப்பு... தேசிய மகளிர் தினத்தில் பிரதமர் மோடி அசத்தல் அறிவிப்பு

பகீர்... துண்டு துண்டாக வெட்டி வாலிபர் படுகொலை: சென்னையில் ரவுடிகள் 2 பேர் கைது!

சிக்கலில் திமுக... உதயநிதியை வளைக்கும் வியூகத்தில் மத்திய சக்திகள்?

ஷாக்... இலங்கையைச் சேர்ந்த 4 குழந்தைகள், தாய் உள்பட 6 பேர் குத்திக்கொலை: கனடாவில் பயங்கரம்!

ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலை துவங்கும் திமுக, அதிமுக... முதல் பட்டியலை வெளியிடப்போவது யார்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in