நடனமாடியபடி சர்வதேச விண்வெளி மையத்துக்குள் நுழைந்த சுனிதா வில்லியம்ஸ்!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர்

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், தனது குழுவைச் சேர்ந்த புட்ச் வில்மோருடன் போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நேற்று நள்ளிரவு சென்றடைந்தார்.

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி தளத்தில் இருந்து போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டனர்.

இவர்கள் சுமார் 26 மணி நேர பயணத்துக்குப் பிறகு அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தை வெற்றிகரமாக சென்றடைந்தனர். அப்போது சுனிதா வில்லியம்ஸ், உற்சாக மிகுதியில் துள்ளல் நடனத்துடன் விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்தார்.

அவரையும், புட்ச் வில்மோரையும், ஏற்கெனவே சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வில் ஈடுபட்டு வரும் சக விண்வெளி வீரர்கள் வரவேற்றனர். இந்நிலையில் டான்ஸ் ஆடியபடியே விண்வெளி நிலையத்துக்குள் சுனிதா வில்லியம்ஸ் நுழையும் வீடியோ வைரலாகி வருகிறது.

சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா, வில்மோர்
சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா, வில்மோர்

சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஒருவாரம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 59 வயதான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் மேற்கொண்டிருப்பது இது மூன்றாவது முறையாகும். மேலும், புதிதாக வடிவமைக்கப்பட்ட போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தை இயக்கிய முதல் வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை!

நடிகை கங்கனாவை அறைந்தது ஏன்?: சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்!

நள்ளிரவில் அதிர்ச்சி... மீன் வியாபாரி உட்பட இருவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற கும்பல்!

பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் ராகுல்காந்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in