மோடி பயணத்துக்கு முன்னதாக இத்தாலியில் மகாத்மா காந்தி சிலைக்கு சேதம்... இந்தியா கடும் கண்டனம்

சிலையாக மகாத்மா காந்தி
சிலையாக மகாத்மா காந்தி
Updated on
2 min read

பிரதமர் மோடியின் இத்தாலி பயணத்துக்கு சற்று முன்பாக, அங்குள்ள மகாத்மா காந்தி சிலை காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

ஜி7 உச்சி மாநாட்டிற்காக பிரதமர் மோடியின் இத்தாலி பயணம் திட்டமிடப்பட்டுள்ளதில், அதற்கு சற்று முன்னதாக இத்தாலியில் காலிஸ்தானி பிரிவினைவாதிகளால் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

இத்தாலியில் சேதப்படுத்தப்பட்ட காந்தி சிலை
இத்தாலியில் சேதப்படுத்தப்பட்ட காந்தி சிலை

"அங்குள்ள மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்தும் முயற்சி, நிச்சயமாக வருந்தத்தக்கது. உடனடியாக அந்த சம்பவம் கவனத்துக்கு வந்ததில், தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டன. காந்தி சிலைக்கு சேதம் நேர்ந்தது தொடர்பாக நாங்கள் இத்தாலிய அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியுள்ளோம். சேதம் சரிசெய்யப்பட்டது தொடர்பான விளக்கங்களையும் பெற்றுள்ளோம்” என வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா இன்று தெரிவித்துள்ளார்.

வெள்ளியன்று ஜி7 உச்சி மாநாட்டின் அமர்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இத்தாலிக்கு வருவதற்கு முன்னதாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதே போன்று கடந்த ஆண்டு ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 மற்றும் குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா வருவதற்கு சற்று முன்பா சிட்னியின் ரோஸ்ஹில்லில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் கோயிலுக்கு காலிஸ்தானி பிரிவினைவாதிகள் சேதம் விளைவித்திருந்தனர்.

ஜி7 வருடாந்திர உச்சிமாநாடு, இம்முறை இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் உள்ள போர்கோ எக்னாசியா என்ற ரிசார்ட்டில் நடைபெறுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமரான பின்னர் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதாலும் அவரது இத்தாலி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

விமானப் பயணம் ஒன்றுக்காக விடைபெறும் மோடி
விமானப் பயணம் ஒன்றுக்காக விடைபெறும் மோடி

பிரதமருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வெளியுறவுத் துறைச் செயலர் வினய், என்எஸ்ஏ அஜித் தோவல் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவும் உடன் பயணிக்க உள்ளது. இத்தாலி ஜி 7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் உடன் பங்கேற்க உள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டி?

நடுவரின் தவறான தீர்ப்பு... உலகக்கோப்பை வாய்ப்பை இழந்த இந்திய கால்பந்து அணி: கொதிக்கும் ரசிகர்கள்!

ரஷ்யா - உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட மேலும் இரண்டு இந்தியர்கள் பலி!

விஜயின் ‘GOAT' பட கிளைமாக்ஸ் காட்சி இது தான்... மாஸ் சம்பவம் செய்த வெங்கட்பிரபு!

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பு வீரர் பலி; 6 பேர் படுகாயம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in